Sunday, April 07, 2024

கோணேசர் கல்வெட்டு மற்றும் தெட்சிண கைலாய புராணம் - ஓலைச்சுவடிகள் PDF

 

Royal Asiatic Society of Great Britain and Ireland இன் உடமையில் இருக்கும், கோணேசர் கல்வெட்டு மற்றும் தெட்சிண கைலாய புராணம் ஏட்டுத்தொகுகிகள் அண்மையில் இங்கிலாந்தில் வசிக்கும் திரு குணசிங்கம் டிவாஷன் அவர்களால்  எண்ணிமப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த ஏட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட அனுபவத்தை திரு குணசிங்கம் டிவாஷன் கீழ் வருமாறு  விவரித்து இருக்கிறார்.


எதை அனுதினமும் நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்...


கோணேசரை தேடிய இந்த நீண்ட பயணத்தில், தற்செயலாக எங்களுக்கு கிடைத்த ஒன்றுதான், Royal Asiatic Society of Great Britain and Ireland இன் 1960 ஆண்டளவில் Prof. Krishnamurthy ஐயா அவர்களின் manuscript catelogue அதில் எங்கள் கவனத்தை ஈர்த்த ஒன்று கல்வட்டு பாட்டு என அடையாளமிடப்பட்ட ஒரு தொகுதி ஏடுகள். 

இது கோணேசர் கல்வெட்டாக கூட இருக்கலாம் என்ற எழுந்தமான எடுகோளின் அடிப்படையில், அவ் society ஐ தொடர்புகொண்டு கேட்டோம் அதற்க்கு அவர்களும் தங்களிடம் உள்ள catalogue ஐ அனுப்பி வைத்தார்கள் ஆனால் அது மிகவும் ஏமாற்றகரமாக இருந்தது, ஏனெனில் அதில் அப்படி ஒரு ஏட்டுத்தொகுதியே இல்லை.

ஒன்றில் ஏடுகள் அழிந்த பின் அதை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும், இல்லை அவை காணாமல் போயிருக்க வேண்டும் என்று கருதி மனதை தேற்றிக்கொண்டோம். 

ஆனால் மனம் அப்படி கடந்துபோக விடுமா என்ன, Lectures களின் இடையில் கிடைத்த break களில், திரும்ப திரும்ப இரண்டு catalogues ஐயும் ஒப்பிட்டதில் Soceity இன் Catelogue இல் அடையாளம் காணப்பட்ட manuscripts பெயர்கள் ஒழுங்கமைந்து இருந்தாலும், சில தொகுதிகள் unidentified ஆக இருந்தது, ஏதோ ஒரு நம்பிக்கையில் அந்த unidentified தொகுதிகளில் ஒன்றாக கோணேசர் கல்வெட்டும் இருக்கலாம் என ஜீவராஜ் அண்ணா கூற,

உடனடியாக Archivist Nancy Charley ஐயும் Chief Librarian Dr. Edward Weech ஐயும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தந்த ஆதரவு அளப்பரியது, குறிப்பாக Chief Libraian அது unidentified ஆக இருப்பதால் அடையளம் கண்டு எடுக்க சிரமமாக இருந்ததாலும் தேடி எடுத்துத்தந்தார்.

மேசையில் வைக்கப்பட்டது, 

உண்மையில் Dr. Edward Reech [Chinese dreams in Romantic England:The life and times of Thomas Manning என்ற வரலாற்று நூலின் எழுத்தாளர்] உம் மிக ஆர்வமாக இருந்தார் அது என்னவென அறிய, ஏனெனில் அவரிடம் கோணேச்சரம் பற்றி நிறைய பேசி இருந்தேன். 

பத்திரமாக திறந்தோம்...

முதல் வரி, "சொல்லுற்ற சீர்க் குளக்கோட்டு மன்னன் சொற்படி..." கோணேசர் கல்வெட்டு...

உலகின் ஒரு மூலையில், ஒரு அறைக்குள் திருப்புகழ் பாட்டுகளில் கொணாமலை எனும் பெயரை தேடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு இப்பேறுகளை எப்படி தாங்கிக்கொள்வது என தெரியவில்லை..

கடந்த இரு வாரங்களில் இரு வேறு கோணேசர் கல்வெட்டுக்களை தொட்டு, ஒலைகளை தடவி, எழுத்துக்களை ரசித்து, எம்முன்னோர் சுவாசம் கலந்துள்ள  அந்த ஓலைகளின் வாசத்தை நுகர்ந்து வாழுகிறேன்.

இனிமேல் அத்தொகுதி unidentified Manuscripts ஆக இருக்கபோவதில்லை, ஏனெனில் அத்தொகுதியி பெயர் "குளக்கோட்டு மகாராசன் சொற்படி அமைந்த கோணேசர் கல்வெட்டு" Author : கவிராசவரோதயன். அவர்கள் அதை update செய்கிறார்கள்.

கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி, ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே..✨

திரு குணசிங்கம் டிவாஷன்





கோணேசர் கல்வெட்டு மற்றும் தெட்சிண கைலாய புராணம்  ஓலைச்சுவடிகளை கீழுள்ள இணைப்புகளுக்கு ஊடாக இலவசமாக தரவிறக்கி வாசிக்கலாம்.



கோணேசர் கல்வெட்டு








 தெட்சிண கைலாய புராணம்









இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment