அமரர் இராம பிரசாந்த் அவர்களுடைய கோணநாயகனின் ஆயிரங்கால் ஆலயம் என்ற நூல் அண்மையில் வெளிவந்திருந்தது. இதனை அவரது தந்தை இரா மகேந்திரராஜா தொகுத்திருந்தார். பூபாலசிங்கம் புத்தகசாலை இந் நூலினை வெளியிட்டு இருந்தது.
புலம்பெயர் தேசங்களில் திருக்கோணேச்சரம் சார்ந்த வரலாற்றுப் பதிவுகள் தேடப்பட்டு வரும் இக்காலப் பகுதியில் பல்வேறு ஐரோப்பியர் வரலாற்றுப் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு தன்னுடைய தேடல்களையும் இணைத்து கட்டுரைகளாகப் பதிவு செய்திருக்கிறார் இந்நூலாசிரியர். அவரது வரலாற்றுத் தேடல்களின் பொழுது எழுந்த கேள்விகளை நம் முன் வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று கீழ் வருமாறு அமைந்திருக்கிறது.
போர்த்துக்கீசர்கள் பிராமணர்களாக வேடம் தரித்துக் கோயிலைச் சூறையாடி அன்றே அதை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள் என்றும், அதில் தப்பி ஓடிய கோயில் பூசகர்கள் கோயில் விக்கிரகங்களைத் திருகோணமலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே புதைத்தனர் எனறும் இந்த முற்றுகையின் போது பிடிபட்டுக் கொண்ட பக்தர்கள், பிராமணர்களைப் போர்த்துக்கீசர்கள் கொலை செய்தனர் என்றும் ஒரு கதையுண்டு. ஆனால், இப்பேர்ப்பட்ட ஒன்று நிகழ்ந்தமைக்குப் போர்த்துக்கீசக் குறிப்புகளிலோ மற்றும் வரலாற்று ஆய்வாளர்களால் எழுதப்பட்ட காலனித்துவ இலங்கை சார்ந்த ஆய்வு நூல்களிலோ எந்த வித ஆதாரச் சான்றுகளும் இல்லை. இருந்தும் திருக்கோணேஸ்வரம் இப்படித்தான் அழிக்கப்பட்டது என்கின்ற ஒரு ஐதீகம் எம்மிடையே பல காலங்களாகவே நிலவி வருகின்றது.திருக்கோணேச்சர வரலாறு சார்ந்து எழுந்த கேள்விகள் போலவே புதிய தகவல்கள் பலவும் இந்நூலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கோணேஸ்வரத்தை அவர்கள் அழித்து விடக் கூடாது என்கின்ற நோக்கில் அதைப் பாதுகாக்கும் பொருட்டு போற்த்துக்கீசர்களுக்கு வருடத்துக்கு 1280 Fanams எம் மூதாதையற்களால் வழங்கப்பட்டன எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நீண்ட காலமாக திருக்கோணேச்சர வரலாற்றில் அறியப்படாத பல விடயங்கள் தொடர்பிலும் இந்நூல் கேள்வி எழுப்பி இருக்கிறது.
எமக்குக் கிடைக்கப் பெற்ற வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாக வைத்து உற்று நோக்கினால் திருக்கோணேஸ்வரம் அழிந்த காலப் பகுதி என ஆய்வாளர்களால் வரையறுக்கப்பட்டிருக்கும் 1622 - 1624 வரையான போர்த்துக்கல்லில் ஏற்பட்ட அரசாட்சி மாற்றங்களும் இலங்கையில் ஏற்பட்ட அதிகார மாற்றங்களும் பெரும் செல்வாக்கைச் செலுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக 1622 - 1623 காலப்பகுதியில் இலங்கையின் 7வது கவணராகப் பணியாற்றிய Jorge de Albuquerque இன் அதிகாரத்தில் திருக்கோணேஸ்வர அழிவு நிகழ்ந்தது என்பது வெளிச்சத்துக்கு வரப்படாத உண்மைகளே.
இரா மகேந்திரராஜா
026 2222613
026 2222944
நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com
No comments:
Post a Comment