Wednesday, October 25, 2023

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியின் புராதன இடங்கள் - புகைப்படங்கள்

வேலை நிமித்தம் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் நடமாடிய பொழுது காணக் கிடைத்த மூன்று புராதன இடங்கள் இங்கே சுருக்கக் குறிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைமன் மணிக் கோபுரம்

கைமன் மணிக் கோபுரம் போத்துக்கீசருடைய காலத்தில் கொழும்பு புறக்கோட்டையின் கிழக்கு நுழைவாயிலாக செயல்பட்டது.  இந்த மணிக்கோபுரம் தற்பொழுது கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலுள்ள பிரதான வீதியும் நாலாவது குறுக்குத் தெருவும் சந்திக்கும் பகுதியில் உள்ளது. இதில் உள்ள மணி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.




Watercolour of Kayman's Gate by J. L. K. van Dort (1888)


கொழும்பு பழைய நகர மண்டபம் /  Old Town Hall, Colombo

ஒவ்வொரு முறையும் ஊரிலிருந்து கொழும்புக்கு வரும்போது இது என்ன கட்டிடம் என்று யோசிப்பதற்கு முன்னர் பேருந்து புறக்கோட்டை பேருந்து நிலையத்தை அடைந்து விடும். வேறொரு வேலை நிமித்தமாகச் சென்ற போது அதனை அருகில் சென்று பார்க்கும் வாய்ப்பு அண்மையில் வாய்த்திருந்தது.

பழைய நகர மண்டபம் 1873 இல் கட்டப்பட்டது. இது பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது, கொழும்பில் திறக்கப்பட்ட முதல் பொதுக் கட்டிடமாகும். இந்த கட்டிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 1924 வரை நகராட்சி தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது.  

1925 ஆம் ஆண்டில், நகராட்சித் தலைமையகம் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அடுத்துள்ள தற்போதைய நகர மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. 







Wolvendaal Church 

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒல்லாந்தர் கால தேவாலயம் இதுவாகும். 1749 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1757 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இத்தேவாலயம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தின் பெயர் தமிழில் ஆட்டுப்பட்டித் தெரு என்றும் ஆங்கிலத்தில் Wolvendaal Street என்றும்  அழைக்கப்படுகிறது.








Watercolour painting of the Dutch Reformed Church (Wolvendaal), Colombo by J. L. K. van Dort (1888)


நட்புடன் ஜீவன்.


இராஜராஜ சோழன் காலத்தில் திருக்கேதீச்சரத்தில் கட்டணப் பாதை

http://www.geevanathy.com/2023/10/blog-post.html




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment