Saturday, July 29, 2023

திருகோணமலைத் தமிழ் கல்வெட்டுகள் 30 - புகைப்படங்கள்


வன்செயல் நிமித்தமாக எங்களுடைய வீட்டில் இருந்து நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்பு கடைசி அறை என்று செல்லமாக அழைக்கப்பட்ட அறையில் ஒரு குட்டி நூலகம் அப்பாவின் பெரும் முயற்சியால் அமைக்கப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக இன வன்முறை காலங்களில் அந்நூலகம் முற்றாக அழிந்து போனது.

ஆரம்ப காலங்களில் தான் கற்பிக்கும் விஞ்ஞான பாட நூல்களுக்கு அப்பால் தன் பார்வையைச் செலுத்தாத அம்மா அவருடைய இறுதி காலத்தில் என்னுடைய இரண்டாவது நூலான தம்பலகாமம் ஊர்ப் பெயர் ஆய்வினை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டு செயல்பட்டார். நான்கு முறை கைவிடப்பட்டிருந்த நூலாக்கம் அவரது இடையறாத தூண்டுதலால்தான் நூலுருப்பெற்றது. எனவே அவர் நினைவாக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முப்பது கல்வெட்டுகளை சிறுகுறிப்போடு பதிவு செய்திருக்கின்றேன்.

நமது இளைய தலைமுறைக்கு வரலாற்றில் நாம் கடந்து வந்த காலங்களை ஞாபகப்படுத்துவதாக இக்கல்வெட்டுக்கள் அமைந்திருக்கின்றன. இக்கல்வெட்டுக்களோடு இங்கே தவற விடப்பட்ட பல கல்வெட்டுகளின் முழுமையான விளக்கங்களோடும், ஆய்வாளர்கள், உதவியவர்களின் குறிப்புகளோடும் ஒரு பெருநூலாக திருகோணமலை வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களால் வருங்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்பது எம்முடைய கனவாகும்.

நட்புடன் ஜீவன்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment