தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றிருந்தார். கனகசுந்தரம்பிள்ளையின் சகோதரரான இவர் தமது தமையனாரைப் போலவே தத்துவ சாஸ்திரத்தில் B.A பட்டம் பெற்று தமிழிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவர் பாரதிக்கு முன்னோடியான ‘தத்தைவிடு தூது” என்ற பெண்விடுதலை செய்யுளையும் எழுதியவராவர்.
தமிழ்ப்பாஷை, தி.த. சரவணமுத்துப்பிள்ளை கடமைபுரிந்த சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்ச் சங்கத்தில் அன்னார் ஆற்றிய உரையின் நூல்வடிவமாகும். இவர்1895/6 இல் தனது 30/31 வது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
நன்றி நவிலல்
திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நூலகத்திட்ட உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது. இவ்வரிய முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பன் சுரேன்குமார் மற்றும் நூலக நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.
இந்த ஓலைச்சுவடிச் சேகரிப்பில் இருந்த கோணை முத்துக்குமாரசுவாமி பொன்னூஞ்சல் தற்போது நூலக நிறுவனத்தினர் PDF வடிவில் பதிவேற்றி உலகிலுள்ள அனைவரதும் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
16 ஓலைச்சுவடிகள் அடங்கிய கோணை முத்துக்குமாரசுவாமி பொன்னூஞ்சல் தற்பொழுது யாவரும் வாசிக்கும் வண்ணம் PDF வடிவில் நூலகத் திட்டத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள படத்தின் மேல் சுட்டுவதன் மூலம் கோணை முத்துக்குமாரசுவாமி பொன்னூஞ்சலினை வாசிக்கலாம்.
எதிர்கால டிஜிட்டல் உலகுக்கான சேமிப்பு.முத்துக்குமாரசாமியின் நிழலில் பயின்றவனின் நன்றிகள்
ReplyDelete