வழமைபோலவே வாசுதேவ வாய்க்காலுக்கு வந்த ஆதினி எந்த அச்சமும் இன்றி முதலை அவளைக் கடிக்கத் துணிந்த அதே மரத்தின் கீழ் பாட்டுப்பாடியபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்ததுபோல அந்தக் காலைப் பொழுதில் எந்த அதிசயமும் நடக்காததால் வழக்கம்போல தோல்பையில் கீரைவகைகளை பறித்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானாள். அப்போது அவள் பின்னால் இருந்து ஒரு குரல் ‘உனக்கு பயமே வரவில்லையா’ என்று கேட்டது. திரும்பிப் பார்த்தாள் நேற்றைய தினம் தன் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞன் எதிர்க்கரையில் நின்று கொண்டிருந்தான்.
Tuesday, January 10, 2023
Saturday, January 07, 2023
வாசுதேவ வாய்க்கால் - (ஆதினி பகுதி 3)
ஆதினியை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும் அவளுடைய பிடிவாதம். சிறுவயதிலிருந்தே ஆதினியின் பிடிவாதம் ஊருக்குள் பிரபல்யம். முதல் நாள் இரவு நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்திப் பலமுறை கோமதி தடுத்தும் அதை ஆதினி கேட்பதாக இல்லை. பொழுது புலர்ந்து கேசவன் வேலைக்குப் போய்விட்டதன் பின்னர் வழக்கம்போல ஆதினி வாசுதேவ வாய்க்காலுக்கு வந்துவிட்டாள். அங்கிருக்கும் மிகப் பெரிய ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் கால்வாய் ஓரங்களில் இருக்கும் இலைக்கறிகளை காலைச்சமையலுக்காக வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டவளாக எந்தவித பதட்டமும் இல்லாமல் பாட்டுப்பாடியபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் அவள்.
Friday, January 06, 2023
இடையர்கல் - (ஆதினி பகுதி 2)
கதை கேட்கிற அவசரத்தில 1996 என்று நினைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆதினியின் கதை இன்றைக்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கந்தளாயில் நடந்தது.
கி.பி 1096 ஆவணி மாதம் நான்காம் திகதி மாலை நேரம்.
மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டு பிரம்மாண்டமான அணைக்கட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் கந்தளாய் குளம் மாலை நேரச் சூரிய ஒளியில் மனதுக்கு இதமான காட்சியைத் தருகிறது. கந்தளாய்க் குளக்கட்டின் ஊடாகச் செல்கின்ற பெருந்தெரு நம்மை பிராமணர்கள் வாழ்கின்ற சதுர்வேதி மங்கலம் என்ற பிரம்மதேயத்திற்குள் கொண்டு சேர்க்கிறது.
Wednesday, January 04, 2023
பிடிவாதக்காரி - ( ஆதினி பகுதி 1 )
முழுமையாக விரட்டிவிட முடியாதபடி எனது கண்களின் ஓரத்தில் நித்திரை குடியிருந்தது. குளியலறைச் சத்தங்களையும் தாண்டி மகளின் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது. மனைவி குசினிக்குள் தேனீர் தயாரித்தபடி திட்டிக்கொண்டு இருந்தாள்.
இருட்டு நேரத்தில இப்ப என்ன அவசரத்துக்கு இவள் விழுந்து கெட்டு போகணும் எண்டு அடம்பிடிக்கிறாள். வயசுக்கு வந்த பொம்பிளப்பிள்ளை எண்ட ஒரு பயமும் இல்லை. எல்லாம் இந்த மனுசன் கொடுக்கிற இடம். எல்லா சத்தங்களையும் தாண்டி மனைவியின் பேச்சும் சலிப்பும் மிகத்தெளிவாக கேட்டுக்கொண்டிருந்தது.