இளையவர்கள் 400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சர ஆலயச் சூழலைப் புரிந்து கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய காட்சிப் பதிவு.
நட்புடன் ஜீவன்.
இளையவர்கள் 400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சர ஆலயச் சூழலைப் புரிந்து கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய காட்சிப் பதிவு.
நட்புடன் ஜீவன்.
வேலை நிமித்தம் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் நடமாடிய பொழுது காணக் கிடைத்த மூன்று புராதன இடங்கள் இங்கே சுருக்கக் குறிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழப் பெரு மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இலங்கையின் மன்னார் பிரதேசத்தில் இருக்கும் வரலாற்றுப் புகழ் பெற்ற துறைமுகமான மாதோட்ட நன்னகரில் இருந்த கட்டணம் செலுத்தி பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட பாதை பற்றிய பதிவு.
A postcard image of a Sri Lankan Tamil woman, 1910.
https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils
தமிழில் பெரிதும் பிரபல்யம் இல்லாத ஒரு துறை பெயராய்வு (onomatology). ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்வரும் ஆவணத்தில் உள்ள நபர்களின் பெயர்களை மக்கட் பெயராய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மழை வேண்டிப் பிராத்தனைகள் செய்யும் வழமைகள் உலகின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு இன, மத, சமுகக் குழுக்களால் இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. அவை
1. ஆகம வழிபாடு (பெரும்தெய்வ வழிபாடு) - கோயிலில் நடைபெறும் நித்திய பூசை, அபிஷேகம், திருவிழா போன்றவை
2. கிராமிய வழிபாடு (சிறுதெய்வ வழிபாடு) - கந்தளாய்க் குள மகா வேள்வி, தம்பலகாமம் நாயன்மார் திடலில் நடைபெறும் மடை வைபவம் ,கள்ளிமேடு ஆலையடியில் நடைபெறும் பத்தினித் தேவி விழா , சிப்பித்திடலில் நடைபெறும் அண்ணமார் வேள்வி, வல்லிக்கண்ணருக்கு மடை, மாகாமத்தில் இடம்பெறும் மூர்க்காம்பிகா விழா போன்ற வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திறந்த வெளிச் சுற்று ஆராதனைகள்.
வன்செயல்
நிமித்தமாக எங்களுடைய வீட்டில் இருந்து நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்பு கடைசி அறை என்று
செல்லமாக அழைக்கப்பட்ட அறையில் ஒரு குட்டி நூலகம் அப்பாவின் பெரும் முயற்சியால்
அமைக்கப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக இன வன்முறை காலங்களில் அந்நூலகம் முற்றாக
அழிந்து போனது.
நரபலி கதையை அறிவாட்டிப் பாட்டி சொல்வதாகச் சொல்லி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஆதினி குட்டி போட்ட பூனையாக அறிவாட்டியின் வீட்டில் நாள்தோறும் வலம் வந்து கொண்டிருந்தாள். அறிவாட்டியை தனிமையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அமையாமலேயே போய்க்கொண்டிருந்தது. உறவு என்று சொல்ல யாருமே இல்லாமல் இடையர்கல்லிற்கு வந்த அறிவாட்டிப் பாட்டியின் ஆரம்ப நாட்கள் பற்றி முன்னம் கோமதி சொல்ல ஆதினி கேட்டிருக்கிறாள்.வாசுதேவ வாய்க்கால் பெருக்கெடுத்து பயிர் நிலங்களையும், கால்நடைகளையும் நாசம் செய்து ஊரில் பஞ்சம் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த நாளொன்றில் அறிவாட்டி ஊருக்கு வந்ததாகச் சொன்னாள்.
திருகோணமலை நகரப் பகுதியில் புகழ்பெற்ற விசுவநாத சுவாமி சிவன் கோயில் தொடர்புடைய வளமைப் பத்ததி எனும் ஓலைச்சுவடி அண்மையில் வாசிக்க கிடைத்தது. இது வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் திரட்டிலிருந்து திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களுக்கு ஊடாக எமது பார்வைக்கு கிடைத்திருந்தது.
திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நூலகத்திட்ட உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது.
வீட்டு வாசலின் களிமண் சுவரில் தலை சாய்த்தபடி கோமதி அமர்ந்திருந்த நிலையைப் பார்த்தபோதே ஆதினிக்கு புரிந்து விட்டிருந்தது. தனது தந்தை காடு செல்ல முடிவெடுத்துவிட்டார். இனி அவரைத் தடுக்க முடியாது. இருந்தாலும் உள்மனதில் ஏதோவொன்று வழமைக்கு மாறாக உறுத்திக் கொண்டிருந்தது. அன்றுதான் அதிசயமாக அந்தக்காட்சியை ஆதினி பார்க்கிறாள். நீண்ட காலத்திற்குப் பிறகு மதியநேரம் ஒன்றில் அவளது அப்பா வீட்டில் இருப்பதையும், குழந்தைகள் அனைவரும் அவர் மடியிலும், தோளிலுமாக துள்ளி விளையாடுவதையும் காண மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்துப்போனது. ஆனால் இந்த சந்தோசம் தொடர்ச்சியாக இருக்க வேண்டுமே என்ற பயம் அவள் மனதை ஆட்டிப்படைத்தது. கேசவனின் கழுத்தினை கைகள் இரண்டாலும் இறுக்கி கட்டிக்கொண்டு ஆதினி அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள்.
எனது வாழ்க்கையில் எப்பொழுதும் நெடுந்தூரப் பயணங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்து விடுவது வழக்கம். திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கான வவுனியா ஊடான இருநூற்று நாற்பது கிலோமீற்றர் தூரப்பயணம் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வினை மனதில் பதித்துச் சென்றிருக்கிறது. அவ்வாறான பயணம் ஒன்றிலேயே தம்பலகாமம் இடப்பெயர் ஆய்வு நூலுக்கான ஆரம்பப்புள்ளி இடப்பட்டது.
இணையத்தில் இலங்கையின் புராதன சிங்கள இடப்பெயர்களும் அவற்றின் தமிழ் வடிவங்களும் என்ற ஆய்வுத் தொகுப்பினைப் பார்த்துக் கொண்டிருந்த போது தம்பலகாமம் தமனதோட்ட என்ற சிங்களப் பெயரினால் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.
தம்பலகாமத்தினை தம்பை நகர், தம்பை ஊர் எனச் சிறப்பித்துக் கூறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை நிலைபெற்று இருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. தம்பை என்ற சொல் இடப்பெயராக நீண்ட காலமாக இலங்கையிலும்;, தமிழ்நாட்டிலும் வழங்கி வந்திருக்கிறது.
எல்லைக்கல் நாட்டப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. காலை வேளையில் ஊரின் நடுப்பகுதியிலிருந்து கேட்ட பறையொலி அனைவரையும் ஒன்று கூடச்செய்தது. ஆதினியும், சகோதரர்களும் தந்தையோடு ஒட்டிக்கொண்டு கூட்டத்தில் கலந்து நின்றார்கள். பறையறிவிப்பவன் கூட்டம் கணிசமாக சேர்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு ஓலைச்சுவடியில் இருந்ததை உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான். நாட்டில் நிலவும் வரட்சியைப்போக்க மழைவேண்டி வழிபடும் கந்தளாய்க் குளத்து மகாவேள்வியை பங்குனி மாதத்தில் நடத்த திருக்கோணேச்சர தொழும்பாளர்களும், கந்தளாய் பெருங்குறிப் பெருமக்களும் தீர்மானித்திருப்பதால் அதற்குரிய அனைத்து ஆயத்தங்களையும் மேற்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பு சொல்லியது.
வழமைபோலவே வாசுதேவ வாய்க்காலுக்கு வந்த ஆதினி எந்த அச்சமும் இன்றி முதலை அவளைக் கடிக்கத் துணிந்த அதே மரத்தின் கீழ் பாட்டுப்பாடியபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்ததுபோல அந்தக் காலைப் பொழுதில் எந்த அதிசயமும் நடக்காததால் வழக்கம்போல தோல்பையில் கீரைவகைகளை பறித்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானாள். அப்போது அவள் பின்னால் இருந்து ஒரு குரல் ‘உனக்கு பயமே வரவில்லையா’ என்று கேட்டது. திரும்பிப் பார்த்தாள் நேற்றைய தினம் தன் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞன் எதிர்க்கரையில் நின்று கொண்டிருந்தான்.
ஆதினியை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும் அவளுடைய பிடிவாதம். சிறுவயதிலிருந்தே ஆதினியின் பிடிவாதம் ஊருக்குள் பிரபல்யம். முதல் நாள் இரவு நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்திப் பலமுறை கோமதி தடுத்தும் அதை ஆதினி கேட்பதாக இல்லை. பொழுது புலர்ந்து கேசவன் வேலைக்குப் போய்விட்டதன் பின்னர் வழக்கம்போல ஆதினி வாசுதேவ வாய்க்காலுக்கு வந்துவிட்டாள். அங்கிருக்கும் மிகப் பெரிய ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் கால்வாய் ஓரங்களில் இருக்கும் இலைக்கறிகளை காலைச்சமையலுக்காக வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டவளாக எந்தவித பதட்டமும் இல்லாமல் பாட்டுப்பாடியபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் அவள்.
கதை கேட்கிற அவசரத்தில 1996 என்று நினைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆதினியின் கதை இன்றைக்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கந்தளாயில் நடந்தது.
கி.பி 1096 ஆவணி மாதம் நான்காம் திகதி மாலை நேரம்.
மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டு பிரம்மாண்டமான அணைக்கட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் கந்தளாய் குளம் மாலை நேரச் சூரிய ஒளியில் மனதுக்கு இதமான காட்சியைத் தருகிறது. கந்தளாய்க் குளக்கட்டின் ஊடாகச் செல்கின்ற பெருந்தெரு நம்மை பிராமணர்கள் வாழ்கின்ற சதுர்வேதி மங்கலம் என்ற பிரம்மதேயத்திற்குள் கொண்டு சேர்க்கிறது.
முழுமையாக விரட்டிவிட முடியாதபடி எனது கண்களின் ஓரத்தில் நித்திரை குடியிருந்தது. குளியலறைச் சத்தங்களையும் தாண்டி மகளின் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது. மனைவி குசினிக்குள் தேனீர் தயாரித்தபடி திட்டிக்கொண்டு இருந்தாள்.
இருட்டு நேரத்தில இப்ப என்ன அவசரத்துக்கு இவள் விழுந்து கெட்டு போகணும் எண்டு அடம்பிடிக்கிறாள். வயசுக்கு வந்த பொம்பிளப்பிள்ளை எண்ட ஒரு பயமும் இல்லை. எல்லாம் இந்த மனுசன் கொடுக்கிற இடம். எல்லா சத்தங்களையும் தாண்டி மனைவியின் பேச்சும் சலிப்பும் மிகத்தெளிவாக கேட்டுக்கொண்டிருந்தது.