கோணேசர் கல்வெட்டில் வருகின்ற உரைநடைப் பகுதியில் நான்கு வம்சங்களைச் சேர்ந்த வன்னிபங்களின் பெயர் பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருகோணமலைப் பிராந்தியத்தின் நான்கு வன்னிமை பிரிவுகளில் தலைவர்களாக விளங்கிய வெவ்வேறு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
இவர்களில் தனியுண்ணாப்பூபாலன் என்ற பட்டப்பெயரை உடைய வன்னிபங்கள் திருகோணமலைப் பற்றுப் பகுதியை ஆட்சி செய்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் பூபாலக்கட்டு என்னும் இடத்தில் மாளிகை அமைத்து வாழ்ந்து வந்ததை கோணேசர் கல்வெட்டின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
திருகோணமலை வன்னிபங்கள் தொடர்பான பூரணமான வரலாற்று ஆய்வுகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் போது இன்னும் பல அரிய தகவல்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
மதுரை மாநகரால் வந்த வன்னிபம்
1. திகழ்மதிக் குலராமன் தனியுண்ணாப்பூபாலன்
2. திருமலைநாடன் தனியுண்ணாப்பூபாலன்
3. சுந்தரநாத தனியுண்ணாப்பூபாலன்
4. அரசுநிலைதவறாத் தனியுண்ணாப்பூபாலன்
5. தன்தாரதார பிறர்புத்திர தனியுண்ணாப்பூபாலன்
8. பசுபதி தனியுண்ணாப்பூபாலன்
9. இலங்கைகாவல தனியுண்ணாப்பூபாலன்
10. குணதுங்கராம தனியுண்ணாப்பூபாலன்
11. அமராபதி தனியுண்ணாப்பூபாலன்
12. சந்திரநேச தனியுண்ணாப்பூபாலன்
13. புவனேயகாவல தனியுண்ணாப்பூபாலன்
14. குறும்பர்கள்கோன் தனியுண்ணாப்பூபாலன்
15. மாற்றலர் பெருமான் தனியுண்ணாப்பூபாலன்
16. செகதுங்கபோச தனியுண்ணாப்பூபாலன்
17. கயிலாயநேச தனியுண்ணாப்பூபாலன்
18. வெற்றி நாயக தனியுண்ணாப்பூபாலன்
19. தன்னாண்மை குன்றாத் தனியுண்ணாப்பூபாலன்
20. பொன்னவராய தனியுண்ணாப்பூபாலன்
21. உத்தமமொழியான் தனியுண்ணாப்பூபாலன்
22. செல்வநாயக தனியுண்ணாப்பூபாலன்
23. வெற்றி நாயக தனியுண்ணாப்பூபாலன்
24. மருதநாயக தனியுண்ணாப்பூபாலன்
25. முருகநாயக தனியுண்ணாப்பூபாலன்
26. சுப்பிரகாய தனியுண்ணாப்பூபாலன்
27. நல்லநாயக தனியுண்ணாப்பூபாலன்
28. வல்லிகாவல தனியுண்ணாப்பூபாலன்
29. பிள்ளைநாயக தனியுண்ணாப்பூபாலலன்
30. பெரியகாவல தனியுண்ணாப்பூபாலன்
31. சிதம்பரநாயக தனியுண்ணாப்பூபாலன்
32. பரமநாயக தனியுண்ணாப்பூபாலன்
33. கதிரைநாயக தனியுண்ணாப்பூபாலன்
34. சேதுகாவல தனியுண்ணாப்பூபாலன்
காரைநகரால் வந்த வன்னிபம்
1. செகராசநாத வன்னிபம்
2. குருநாதராம வன்னிபம்
3. உலகாண்ட வன்னிபம்
4. கயிலாய வன்னிபம்
5. கனகராச வன்னிபம்
6. படைகாத்த வன்னிபம்
7. எதிரிகளேறு வன்னிபம்
8. கணபதிராச வன்னிபம்
9. நயத்தருராம வன்னிபம்
10. தருமநெறியான் வன்னிபம்
11. படைவீரங்கண்ட வன்னிபம்
12. மதுரவாசக வன்னிபம்
13. தியாகராச வன்னிபம்
14. கரசைகாவல வன்னிபம்
15. அன்னசத்திர வன்னிபம்
16. வரையாதளிக்கும் வன்னிபம்
17. கதிரைமாமலை வன்னிபம்
18. ஏகாந்த வன்னிபம்
19. ஏரம்ப வன்னிபம்
20. நல்லையினார் வன்னிபம்
21. சொக்கனாயக வன்னிபம்
22. சுந்தரனாத வன்னிபம்
23. பாற்கரர் வன்னிபம்
24. வீரராம வன்னிபம்
25. குணதுங்கராம வன்னிபம்
26. நாகமாமணி வன்னிபம்
27. கயிலாயநாயக வன்னிபம்
28. புவிராம வன்னிபம்
29. சோமநாயக வன்னிபம்
30. உலகநாயக வன்னிபம்
31. சூரியநாயக வன்னிபம்
32. நந்திநாயக வன்னிபம்
33. சந்திரதேவ வன்னிபம்
34. இலட்சுமிநாயக வன்னிபம்
35. இலட்சுமிநாயக வன்னிபம்
36 சந்திரதேவ வன்னிபம்
37. பெற்றிநாயக வன்னிபம்
38. உலகநாயக வன்னிபம்
39. வயிரவநாயக வன்னிபம்
40. அரசுகாவல வன்னிபம்
41. திருமலைப் பெருமாள் வன்னிபம்
42. சிதம்பரநாத வன்னிபம்
43. புட்பநாயக வன்னிபம்
சோழநாட்டால் வந்த வன்னிபம்
1. காராளசிங்க வன்னிபம்
2. தந்தியசிங்க வன்னிபம்
3. மதராசசிங்க வன்னிபம்
4. திருமலைராயசிங்க வன்னிபம்
5. இராமசிங்க வன்னிபம்
6. இலட்சுமணசிங்க வன்னிபம்
7. சந்திரசிங்க வன்னிபம்
8. அடைக்கலங்காத்தசிங்க வன்னிபம்
9. கங்கைகாவலசிங்க வன்னிபம்
10. மருதநாயகசிங்க வன்னிபம்
11. கனகநாயகசிங்க வன்னிபம்
12. இலங்கைகாவலசிங்க வன்னிபம்
13. கயிலாயசிங்க வன்னிபம்
14. குமாரவேல்சிங்க வன்னிபம்
15. திருவம்பலசிங்க வன்னிபம்
16. பரமானந்தசிங்க வன்னிபம்
17. அம்புயபதிசிங்க வன்னிபம்
18. சிவஞானமுத்துச்சிங்க வன்னிபம்
19. சித்தநாயகசிங்க வன்னிபம்
20. நாகமாமணிச்சிங்க வன்னிபம்
21. சிதம்பரநாயகசிங்க வன்னிபம்
22. நல்லநாயகசிங்க வன்னிபம்
23. அருணநாயகசிங்க வன்னிபம்
24. வீரசுந்தரசிங்க வன்னிபம்
25. சொக்கநாயகசிங்க வன்னிபம்
26. தருமநாயகசிங்க வன்னிபம்
27. அத்திநாயகசிங்க வன்னிபம்
28. மூத்தநாயகசிங்க வன்னிபம்
29. பசுபதிநாயகசிங்க வன்னிபம்
30. இராசரத்தினசிங்க வன்னிபம்
31. எதிர்வீரசிங்க வன்னிபம்
மருங்கூர் வன்னிபம்
1. நடராச குமாரசிங்க வன்னிபம்
2. வெற்றிக் குமாரசிங்க வன்னிபம்
3. இராமநாதக் குமாரசிங்க வன்னிபம்
4. இலட்சுமணநாதக் குமாரசிங்க வன்னிபம்
5. நல்லநாயக குமாரசிங்க வன்னிபம்
6. சிங்க வன்னிபம்
7. தில்லைநாதக் குமாரசிங்க வன்னிபம்
8. எல்லைக்காவல குமாரசிங்க வன்னிபம்
9. சாரங்கநாயக குமாரசிங்க வன்னிபம்
10. கங்கைகாவல குமாரசிங்க வன்னிபம்
11. இலங்கைகாவல குமாரசிங்க வன்னிபம்
12. தனிமைநாயக குமாரசிங்க வன்னிபம்
13. சந்திரராய குமாரசிங்க வன்னிபம்
14. கயிலாய குமராசிங்க வன்னிபம்
15. சந்திரராய குமாரசிங்க வன்னிபம்
16. கயிலாய குமராசிங்க வன்னிபம்
17. இரகுநாத குமாரசிங்க வன்னிபம்
18. சுப்பிரகாச குமாரசிங்க வன்னிபம்
19. தனமநாயக குமாரசிங்க வன்னிபம்
20. வேதனாயக குமராசிங்க வன்னிபம்
21. கொற்றவராச குமாரசிங்க வன்னிபம்
22. தண்டுவார்மிண்டக் குமாரசிங்க வன்னிபம்
23. எதிரிநாயகக் குமாரசிங்க வன்னிபம்
24. கோமளராகவ குமாரசிங்க வன்னிபம்
25. திருமலைராய குமாரசிங்க வன்னிபம்
26. அடைக்கலங்காத்த குமாரசிங்க வன்னிபம்
27. படைவீரகண்ட குமாரசிங்க வன்னிபம்
28. அம்புயாபதிக் குமாரசிங்க வன்னிபம்
29. சரவண குமாரசிங்க வன்னிபம்
30. சேதுநாத குமாரசிங்க வன்னிபம்
31. சித்திரமொழிக் குமாரசிங்க வன்னிபம்
32. மனுநேயநாயக குமாரசிங்க வன்னிபம்
33. ஆரியநேய குமாரசிங்க வன்னிபம்
34. சித்திரமொழிக் குமாரசிங்க வன்னிபம்
35. சுந்தரநாய குமாரசிங்க வன்னிபம்
36. திருவுறைநாடன் குமாரசிங்க வன்னிபம்
37. குணரத்தினக் குமாரசிங்க வன்னிபம்
No comments:
Post a Comment