தம்பலகாமம் குடாக்கடல் பண்டைய துறைமுகங்களில் ஒன்றாக இருந்தது. அது துறைமுகமாகச் செயற்பட்டது தொடர்பில் ஐரோப்பியர் காலத்து பதிவுகளே அதிகளவில் கிடைக்கின்றன. தம்பலகாமம் குடாக்கடலின் கப்பல்துறைக் கிராமப்பகுதியில் முன்னர் துறைமுகம் ஒன்று இருந்ததற்கான அழிபாடுகள் காணக் கிடைத்ததாக 1970 களில் கப்பல்துறைக்காட்டில் வேட்டையாடச் சென்றவர்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது. சிப்பித்திடல், முள்ளியடிப் பகுதிகள் எதிர்காலத்தில் களஆய்வு செய்யப்படுமாக இருந்தால் மேலும் பல விடயங்கள் வெளிவரக்கூடும்.
Wednesday, December 21, 2022
Thursday, December 08, 2022
திருகோணமலை வன்னிபங்கள் - பெயர் பட்டியல்
கோணேசர் கல்வெட்டில் வருகின்ற உரைநடைப் பகுதியில் நான்கு வம்சங்களைச் சேர்ந்த வன்னிபங்களின் பெயர் பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருகோணமலைப் பிராந்தியத்தின் நான்கு வன்னிமை பிரிவுகளில் தலைவர்களாக விளங்கிய வெவ்வேறு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
Tuesday, December 06, 2022
07.06.1786 இல் ஆதிகோணநாயகர் ஆலயம்
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் காலனித்துவ ஆட்சியாளர்களின் பயணக்குறிப்புகளில் Tamblegam Pagoda என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று நமக்குக் கிடைக்கும் Tamblegam Pagoda தொடர்பான பல்வேறு தகவல்களில் ஒல்லாந்து ஆளநர் Van Senden அவர்களின் குறிப்பு அதிக முக்கியத்துவம் பெறுவதாக அமைகிறது.
Subscribe to:
Posts (Atom)