Wednesday, September 28, 2022

திரிகோணமலை அந்தாதி - 1886 - ஓலைச்சுவடிகள் pdf

திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த  வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நூலகத்திட்ட உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது.

இவ்வரிய முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பன் சுரேன்குமார் மற்றும் நூலக நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.






இந்த ஓலைச்சுவடிச் சேகரிப்பில் இருந்த திரிகோணமலை அந்தாதியினை தற்போது நூலக நிறுவனத்தினர் PDF வடிவில் பதிவேற்றி உலகிலுள்ள அனைவரதும் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

திரிகோணமலை அந்தாதி திருக்கோணேசர் மேல் பாடப்பட்ட அந்தாதி நூலாகும். திருகோணமலை சிதம்பரநாதர் சுப்பிரமணீயனார் என்னும் புலவரின் புதல்வரும் ஆறுமுக முதலியார் என்று அழைக்கப்பட்டவருமான புலவர் சு. ஆறுமுகம் என்பவரால் 1886 ஆம் ஆண்டளவில் இந்நூல் பாடி முடிக்கப்பட்டது. திரிகோணமலை அந்தாதி 1990 இல் இந்து கலாசார அமைச்சினால் மீள் பதிப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.









92 ஓலைச்சுவடிகள் அடங்கிய திரிகோணமலை அந்தாதி தற்பொழுது யாவரும் வாசிக்கும் வண்ணம் PDF வடிவில் நூலகத் திட்டத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள ஓலைச்சுவடியின் மேல் சுட்டுவதன் மூலம் திரிகோணமலை அந்தாதியினை வாசிக்கலாம்.








இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment