Wednesday, December 21, 2022

தம்பலகாமம் குடாக்கடல் - Tamblegam bay

தம்பலகாமம் குடாக்கடல் பண்டைய துறைமுகங்களில் ஒன்றாக இருந்தது. அது துறைமுகமாகச் செயற்பட்டது தொடர்பில் ஐரோப்பியர் காலத்து பதிவுகளே அதிகளவில் கிடைக்கின்றன. தம்பலகாமம் குடாக்கடலின் கப்பல்துறைக் கிராமப்பகுதியில் முன்னர் துறைமுகம் ஒன்று இருந்ததற்கான அழிபாடுகள் காணக் கிடைத்ததாக 1970 களில் கப்பல்துறைக்காட்டில் வேட்டையாடச் சென்றவர்கள் மூலமாக  அறியக்கூடியதாக இருக்கிறது. சிப்பித்திடல், முள்ளியடிப் பகுதிகள் எதிர்காலத்தில் களஆய்வு செய்யப்படுமாக இருந்தால் மேலும் பல விடயங்கள் வெளிவரக்கூடும்.

Thursday, December 08, 2022

திருகோணமலை வன்னிபங்கள் - பெயர் பட்டியல்


கோணேசர் கல்வெட்டில் வருகின்ற உரைநடைப் பகுதியில் நான்கு வம்சங்களைச் சேர்ந்த வன்னிபங்களின் பெயர் பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருகோணமலைப் பிராந்தியத்தின் நான்கு வன்னிமை பிரிவுகளில் தலைவர்களாக விளங்கிய வெவ்வேறு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

Tuesday, December 06, 2022

07.06.1786 இல் ஆதிகோணநாயகர் ஆலயம்


தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் காலனித்துவ ஆட்சியாளர்களின் பயணக்குறிப்புகளில் Tamblegam Pagoda என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று நமக்குக் கிடைக்கும் Tamblegam Pagoda தொடர்பான பல்வேறு தகவல்களில் ஒல்லாந்து ஆளநர் Van Senden அவர்களின் குறிப்பு அதிக முக்கியத்துவம் பெறுவதாக அமைகிறது.

Tuesday, October 11, 2022

ஊர்ப்பெயர் திரிபு - தம்பலகாமம் முதல் Thambalagamuwa வரை

ஊர்ப் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வருவதை இடப்பெயர் வரலாறு நெடுகிலும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறு ஊர்ப் பெயர்களில் திரிபு வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 

Sunday, October 09, 2022

அணிந்துரை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன் - தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு

கலாநிதி கனகசபாபதி சரவணபவன்

இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து வரலாற்று எழுத்தியலிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.  போரில் தொடர்புடைய சிற்றூர்கள், பாலங்கள், போர்க் கப்பல்கள்,  வழிபாட்டுத் தலங்கள் என இதுவரை அதிகம் பேசப்படாமல் இருந்த பல விடயங்கள்  வரலாற்று  ஆய்வாளர்களின் கவனத்தை திருப்பின.  வரலாற்றுத்துறைசாரா ஆர்வலர்களினால்  அவர்களைச் சுற்றியுள்ள இடங்கள் மிக அக்கறையோடு கவனிக்கப்பட்டது. இதுவரை பெரு வரலாறு பெற்றிருந்த முக்கியத்துவத்தை நுண் வரலாறு  பெறத் தொடங்கியது. நமது பாரம்பரிய வரலாற்றுக் கல்வியானது தேசம் என்ற ஒரு பெரும் நிலப்பரப்பின் ஆட்சியாளர்களது வாழ்க்கையை கால ஒழுங்கு நிரலில் எழுதி வரலாறாகப் போதித்துக் கொண்டிருக்கின்றது. அது ஒரு தேசத்தின் புற உருவப் படத்திற்கு நிகரானதே தவிர உள்ளடக்க விளக்கங்கள் நிறைந்தவை அல்ல. 

நூன்முகம் - பேராசிரியர் சி. பத்மநாதன் - தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு


நூன்முகம்

வரலாற்றுப் பேராசிரியர் சி. பத்மநாதன்

வேந்தர்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.


இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஜீவராஜ் பல ஆண்டுகளாக எமக்கு அறிமுகமானவர். பல்கலைக் கழகத்து மருத்துவக் கல்லூரியில் மேனாட்டு மருத்துவக் கலை பயின்று, பட்டதாரியானபின் பலவருடங்களாகத் திருகோணமலையில் உள்ள அரசினர் வைத்தியசாலைகளில் தொழில் புரிந்து வருகிறார். 

Saturday, October 08, 2022

திருக்கோணேச்சரத்தில் பணியாற்றிய தேவரடியார்கள்

கோயில் திருப்பணிக்காக தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தேவரடியார்கள். பண்ணிசை பாடுதல், நடனமாடுதல்,இசைக்கருவிகளை இசைத்தல் என்பன தேவரடியார்களின் முக்கிய பணி என்று கருதப்பட்டாலும்  ஆலய வளாகத்தை சுத்தப்படுத்துதல், பூமாலை கட்டுதல், விளக்கெரித்தல் சில சமயம் மடப்பள்ளி வேலைகளில் உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை தேவரடியார்கள் மேற்கொண்டார்கள்.

Wednesday, September 28, 2022

திரிகோணமலை அந்தாதி - 1886 - ஓலைச்சுவடிகள் pdf

திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த  வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நூலகத்திட்ட உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது.

Tuesday, September 13, 2022

திருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மகாநாடு - புகைப்படங்கள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்திருக்கும் தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கோணேச்சர ஆலயத்தின் வருடாந்த  மகாசிவராத்திரி வரலாற்று ஆய்வு மகாநாடு 08.02.2024 வெள்ளிக்கிழமை அன்று மிகச் சிறப்புற இடம்பெற்றது. 

Thursday, September 01, 2022

வெல்கம் விகாரை கல்வெட்டுகள் - புகைப்படங்கள்

 

திருகோணமலையில் பெரியகுளம் பகுதியில் இருக்கும் வெல்கம் விகாரை என அழைக்கப்படுகின்ற இராஜராஜப் பெரும் பள்ளியில்  11, 12, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 தமிழ் அறக்கொடைச் சாசனங்கள் 1929, 1953 ஆண்டுகளில் இடம்பெற்ற தொல்பொருள் ஆய்வுகளின்போது கிடைக்கப்பெற்றன. திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம். வெல்காமம் என்னும் ஊரில் இவ்விகாரை அமைந்திருந்ததால் வெல்காமப்பள்ளி என்றும் அழைக்கப்பட்டது.

Friday, August 12, 2022

கொட்டியாரப் பற்று வன்னிபங்கள் - நூல் வெளியீடு 14. 08. 2022 காலை 10 மணி

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு காலப்பகுதிகளுக்குரிய 22 கல்வெட்டுகளின் வாசகங்களை உள்ளடக்கி இருக்கும் இந்நூல் ‘கொட்டியாரப் பற்று வன்னிபங்கள்’ என்ற தலைப்புடன் எனது முதலாவது நூலாக வெளிவருவது மகிழ்ச்சி தருகிறது.