மெய்க்கீர்த்தி என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டு என்பதாகும். பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவற்றைச் செப்பேடுகளில் பொறித்து வைத்திருந்தனர். எனினும் அவற்றுக்கு மெய்க்கீர்த்தி எனப்பெயரிட்டு, அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்து ஒருபுரட்சிகரமான மாற்றத்தை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முதன்முதலில் செய்தவர் பேரரசன் முதலாம் இராசராசன்.
இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுக்கள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.
திருகோணமலையில் சோழராட்சியின் ஆதாரப்படுத்தல்களாக அவர்களது மெய்க்கீர்த்திகளைச் சொல்லும் மூன்று சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் கட்டப்பட்ட போது அவ்வாலயத்தில் வைத்துக் கட்டப்பட்ட தூணாகும்.
இந்தத் தூணின் நான்கு பக்கங்களிலும் முதலாம் இராஜேந்திர சோழனின் புகழ் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தூணின் ஒரு பகுதி பூச்சினால் மறைந்துவிட ஏனைய மூன்று பக்கங்களிலிருந்த வாசகங்கள் மட்டுமே வாசிக்கக் கூடியதாக உள்ளது.
இவ்வாசகங்களிலிருந்து வரலாற்றுரீதியான முக்கிய விடையங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அதனை ஒரு ஆலயத்திற்கான நன்கொடைச் சாசனமாகக்கருதமுடியும். திரு.சோமாஸ்கந்த குருக்கள் உதவியுடன் திரு.நா.தம்பிராசா அவர்களின் முயற்சியினால் பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் செ.குணசிங்கம் ஆகியோரால் வாசிக்கப்பட்டு வீரகேசரி மூலம் 1972 ஆம் ஆண்டில் வெளிப்படுத்தப்பட்ட இக்கல்வெட்டின் நான்காவது பக்கத்தை வாசிப்பதற்கான முயற்ச்சி 2004ஆம் ஆண்டில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டபோதும் பயனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு தெற்கு மேற்கு
பக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3
1. ஸ்வ ஸி ஸ்ரீ த 1. சுந்தர 1. திருத்தகு
2. திருமன்னிவ 2. முடியும் 2. முடியும்
3. ளர இரு தில 3. இந்திர 3. பய(ங்)கொடு
4. மட(ந்தை) 4. னாரமு 4. பழிமிக
5. யு(ம்)(பொ)ற்ச 5. ம் தெண் 5. முயங்
6. யப் (பாவை) 6. டிரை ஈழ 6. கியில்
7. (யு)ம் தன் 7. மண்டல 7. முதுகி
8. (பெருந் தெவி) 8. முழுவது 8. ட்டு ஒ-
9. யராகி இ- 9. ம் எறிப 9. (ழித்த)
10. ன் (புற) நெ 10. டைக் கெர 10. ஜ(ய)சி
11. டுதியல் ஊ 11. ளன் முறை ம 11. (ங்) கன்
12. ழியுள் இட 12. யிற் (சூடுங்) 12. அளப்பரும்
13. (துறை) நா (டும்) 13. (குலதந) மா 13. புகழொ
14. (தொடர்வந) 14. கிய பல(h) 14. டு பீடி
15. வெலிப் (படர்) 15. புகழ் மு- 15. யல் இ
16. (வன) வா(சி) 16. டியும் 16. ரட்டபா
17. யும் சுள்ளிச் 17. செங்கதி 17. டி ஏழ
18. (சூ) ழ்மதில் கொ 18. ர் மாலை 18. ரை இலக்
19. ள்ளிப்பா 19. யும் சங் 19. கமும் ந
20. க்கையும் 20. கதிர் வெ 20. வ(n)நதிக்
21. தண்ண 21. லைத் தொ 21. குலப்பே
22. ற் கரு முர 22. ல் பெருங்கா 22. ருமலை
23. ண் மண் 23. வற் பல்ப 23. களும்
24. ணைக்கட 24. ழந் தீவும் 24……….
25. க்கமும் 25. செருவில் (சி) 25……….
26. பொருகட 26. னைவி இரு 26……….
27. லீழத்த 27. ப(த் தொரு) கா 27……….
28. ரைசர்தம் 28. ல் அரைசு 28……….
29. முடியும் 29. (க) ளை கட்ட 29……….
30. ஆங்கவர் 30. பரசுராமன் 30………..
31. தெவியர் ஓ- 31. மெவரும் 31………
32. ங் கெழில் 32. சா(ந்)தி ம(த்) 32………
33. முடியும் 33. தீவரண் க 33………
34. முன்னவர் 34. ருதி (இரு) 34………
35. பக்கல் தெ 35. த்திய செ 35………
36. ந்நவர் 36. ம் பொற் 36………
37. வைத்த 37. ………….. 37………
இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தி கல்வெட்டு:
ReplyDeleteஸ்வஸ்திஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்
துடர்வன வேலிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரண் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுிந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தெண்திரை ஈழ மண்டலம் முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத்
தொல் பெருங்காவல் பல்பழந் தீவும்
செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்
பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு
ஒளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடும்
பீடியல் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதிகுலப்பெரு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
முதிர்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடை வளைய நாமணைக் கோணமும்
வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசுடைப் பழன மாசுணித் தேசமும்
அயர்வில்வண் கீர்த்தி யாதிநக ரவையில்
சந்திரன் தொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டருஞ் செறிமிளை யொட்ட விக்ஷயமும்
பூசுரர் சேர்நல் கோசல நாடும்
தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சூரனை முறணுறத் தாக்கித்
திக்கணைக் கீர்த்தி தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒன்திறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன்மலை யூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடையார் ஸரீஇராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு