மெய்க்கீர்த்தி என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டு என்பதாகும். பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவற்றைச் செப்பேடுகளில் பொறித்து வைத்திருந்தனர். எனினும் அவற்றுக்கு மெய்க்கீர்த்தி எனப்பெயரிட்டு, அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்து ஒருபுரட்சிகரமான மாற்றத்தை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முதன்முதலில் செய்தவர் பேரரசன் முதலாம் இராசராசன்.