கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக அவசியமான விடையமாக கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் குறிப்பிடப்படுகிறது. இன்று பெரும்பாலான அரச, தனியார் நிறுவனங்களின் வரவேற்புப்பகுதியில் சேவைநாடிகள் தங்கள் கைகளைச் சுத்தம் செய்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உண்மையில் பாராட்டப்படவேண்டிய இச்செயன்முறை இன்றைய காலத்தின் தேவை கருதி அந்தந்த நிறுவனங்களின் வளங்களுக்கு அமைவாக அவசரஅவசரமாக உருவாக்கப்பட்டவை என்பது கவனத்தில்கொள்ளத்தக்கது. இங்குள்ள பெரும்பாலான நீர்க்குளாய்கள் கைகளால் திருகி திறந்து மூடக்கூடியவையாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
நடைமுறைச் சிக்கல் - முறையான படிமுறைகளுக்கு அமைய தனது கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவி முடித்த ஒருவர் அந்த நீர்க்குழாயினைப் பூட்டுவதற்காக திருகியைத் தொடும்போது அதில்லுள்ள கிருமி அவரில் மீள ஒட்டிக்கொள்ளும். இதனால் கைகளைச் சுத்தப்படுத்தும் பொறிமுறை முற்றாகப் பயனற்றதாகும்.
தீர்வு – கைகளை முறையாகச் சுத்தம் செய்த பின்னர் சுத்தமான ரிசுவினால் நீர்க்குளாயின் திருகியைப் பிடித்து மூடிவிட்டு அந்த ரிசுவினை மூடக்கூடிய குப்பைத் தொட்டியில் போடவேண்டும். அல்லது நீர்க்குளாய் திருகி கீழுள்ளவாறு மாற்றியமைக்கப்படவேண்டும்.
நட்புடன் ஜீவன்.
இல்லாதவிடத்து Foot Push Valve Tab இனைப்பயன்படுத்த வேண்டும்.
நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com
No comments:
Post a Comment