Thursday, January 10, 2019

நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தியாலய நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.



திருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில் பெரும்பாலும் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் சுமார் 86 பிள்ளைகள் கல்விகற்கிறார்கள்.

இவர்களது வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் நோக்குடனும், அடைவுமட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனும் பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அமரர் பழனியாண்டி பூபதியம்மா
( 06.11.2015 )

இத்தேவை தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு உடனடியாக உதவ முன்வந்த திருமதி.சுபாசினி சோதிலிங்கம் ( ஜேர்மனி )அவர்கள் தனது மாமியார் அமரர் பழனியாண்டி பூபதியம்மா அவர்களின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு பாடசாலை நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்புச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வாசிப்பை நேசித்தால் அறிவைப் பெறலாம். வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை ஆற்றுப் படுத்தவேண்டும். நூல்களை சேகரிக்க பரப்புரை செய்வது நலம். நூல்களை வழங்கியவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete