இக்கள ஆய்வில் சுகாதார அமைச்சின் யானைக்கால் நோய் தடுப்பு பிரிவின் விசேட மருத்துவ நிபுணர்( CCP) , பொதுச் சுகாதார பரிசோதனையாளர் (PHI), பொதுச் சுகாதார கள உத்தியோகத்தர் (PHFO), பொதுச் சுகாதார பூச்சி ஆராய்ச்சி உத்தியோகத்தர் (HEO), ஆகியோர் உள்ளிட்ட விசேட குழுக்கள் பங்குபற்றுகின்றனர்.
இது திருகோணமலை மாவட்டத்தின் கீழ்வரும் தினங்களில் குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்இடம்பெறும்,
• ஆடி 16 முதல் 22 வரை - திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு
• ஆவணி 12 முதல் 19 வரை - மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு
கள ஆய்வின் போது காவி நுளம்புகளை சேகரிக்கும் பணியும் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் யானைகால் நுண்புழுவுக்கான இரவுநேர குருதிப் பரிசோதனையும் இடம்பெறும்.
இந்த களஆய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்ய பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமாதலால் அதனை நாம் தயவுடன் வேண்டிநிற்கிறோம்.
யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு
சுகாதார அமைச்சு
www.filariasiscampaign.health.gov.lk
அருமையான பணி
ReplyDeleteதொடருவோம்!