போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஆறாவது கட்டமாக ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 26.05..2018 அன்று நடைபெற்றது.
கனடாவில் உள்ள திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், சங்க அங்கத்தவர்களின் குடும்பங்கள், அவர்களது நண்பர்கள் இணைந்து மேற்படி ஊட்டச்சத்து உணவுக்கான நன்கொடையினை வழங்கி இருந்தார்கள்.

மிதமான ஊட்டச்சத்து இன்மை (MAM), கடுமையான ஊட்டச்சத்து இன்மை
(SAM) ஆகிய போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஊட்டச்சத்து உணவே ஆறாம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

நீண்டகாலம் இடம்பெற்றுவந்த யுத்த அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் மிகவும் பின்தங்கியவர்களாக இக்கிராம மக்கள் காணப்படுகிறார்கள். எனவே இவர்களது வாழ்வாதாரத்தினை மேன்படுத்துவதே இக்கிராமங்களில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே அதற்கான முன்னகர்வுகளை அரச, தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், பொதுமக்களின் ஆக்கபூர்வமான பங்குபற்றுதலுடனும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் நாம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில்
பார்க்க-பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. புகைப்படங்கள்
இக்கிராமங்களில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேற்படி தரவுகளின் அடிப்படையில் விடுக்கப்பட்ட உதவிகோரலுக்கு திரு. பாஸ்கரன் தினேசன் (செயலாளர்) அவர்களின் முயற்சியினால் கனடாவில் உள்ளகோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் உடனடியாக உதவிட முன்வந்தனர்.

பார்க்க - பாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
பார்க்க - பாட்டாளிபுரத்தில் மூன்றாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
பார்க்க - சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்
பார்க்க - ஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் -கனடா 25.08.2017 திகதி முதல் ஆறு கட்டங்களாக ஊட்டச் சத்துணவு வழங்குதல் என்ற தீர்மானத்துக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் இறுதி நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு தொடர்பாக எமது பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான அறிமுகக்கூட்டம் 25.05.2018 அன்று நடத்தப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சார விடையங்களில் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே எமது அடுத்த தலைமுறையினரை சமுகநல விடையங்களில் ஆர்வங்கொள்ளச் செய்வது அவசிமாகிறது..
இதனைக்கருத்தில் கொண்டே இவ் அறிமுகக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எமது எதிர்பார்ப்பிற்கு அதிகமாக மாணவர் தலைவர்கள் அனைவரும் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டதோடு பாட்டாளிபுரம் நோக்கிப் பயணிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். நிர்வாக, பொருளாதாரக் காரணங்களுக்காக அவர்களில் சிலரையே எம்மால் பாட்டாளிபுரம் அழைத்துச்செல்ல முடிந்தது.
நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள் அப்பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளை நேரடியாகக் கண்டபின் இதுபோன்ற பின்தங்கிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சமுகநல செயற்பாடுகளுக்கு தம்மாலான உதவிகளை தொடர்ந்தும் செய்ய இருப்பதாக உறுதியளித்தனர். அத்துடன் தன்னார்வமாக தாம் திருகோணமலையில் இருந்து சேகரித்துவந்த கற்றல் உபகரணங்களை பாட்டாளிபுரம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கினர்.
Dr.சரவணபவன் தலைமையில் Dr.நிலோஜன் உதவியுடன் Dr.த.ஜீவராஜ் ஒழுங்கமைப்பில் சுகாதார மருத்துவ மாது திருமதி. காளீஸ்வரி, தன்னார்வத் தொண்டர் திரு.காண்டீபன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக
பார்க்க - சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்
பார்க்க - ஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
அடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல்
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு தொடர்பாக எமது பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான அறிமுகக்கூட்டம் 25.05.2018 அன்று நடத்தப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சார விடையங்களில் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே எமது அடுத்த தலைமுறையினரை சமுகநல விடையங்களில் ஆர்வங்கொள்ளச் செய்வது அவசிமாகிறது..
இதனைக்கருத்தில் கொண்டே இவ் அறிமுகக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எமது எதிர்பார்ப்பிற்கு அதிகமாக மாணவர் தலைவர்கள் அனைவரும் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டதோடு பாட்டாளிபுரம் நோக்கிப் பயணிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். நிர்வாக, பொருளாதாரக் காரணங்களுக்காக அவர்களில் சிலரையே எம்மால் பாட்டாளிபுரம் அழைத்துச்செல்ல முடிந்தது.
நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள் அப்பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளை நேரடியாகக் கண்டபின் இதுபோன்ற பின்தங்கிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சமுகநல செயற்பாடுகளுக்கு தம்மாலான உதவிகளை தொடர்ந்தும் செய்ய இருப்பதாக உறுதியளித்தனர். அத்துடன் தன்னார்வமாக தாம் திருகோணமலையில் இருந்து சேகரித்துவந்த கற்றல் உபகரணங்களை பாட்டாளிபுரம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கினர்.
சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு
திரு. பிரதீபன்
(திருகோணமலை உதவி அரசாங்க அதிபர்)
திரு. பத்மசீலன்
( அதிபர் - இ.கி.ச..ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி )
மற்றும் இ.கி.ச..ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு நேரடியாக சத்துணவுகளை வழங்கி வைத்தனர். நிர்வாக உதவிகளை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வழங்கி இருந்தது.
Dr கேதீஸ்வரன் (Australian Medical Aid Foundation: AMAF) , Dr. கயல்விழி (Regional Director of Health Services, Trincomalee) ஆகியோரது ஆலோசனைகளுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் போசாக்கின்மை தொடர்பான அறிக்கை தயாரித்து உதவிய நண்பன் Dr. கஜபதி (PhD, Lecturer in Zoology, University of Jaffna) சத்துமா கொள்வனவில் உதவிய திரு. சக்திமயூரன் (Capital pharma corner, Trincomalee) ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.
Dr.த.ஜீவராஜ்
(நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)
No comments:
Post a Comment