Wednesday, January 24, 2018

மோகனாங்கி (1895) - வெளியீடு 31.1.2018 புதன் மாலை 4.30மணி

இது குளக்கோட்டன் சமூகம்

1895 இல் தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல்.
ஆசிரியர்: திருகோணமலை தம்பிமுத்துப்பிள்ளை சரவணமுத்துப்பிள்ளை
இடம்: திருகோணமலை இந்துக்கல்லூரி மண்டபம்.
காலம்: 31.1.2018 புதன் கிழமை.
மாலை 4.30மணி


வரலாற்றை புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் தரிசித்த இந்தியத் தமிழ்ச் சூழலில் மோகனாங்கி என்ற வரலாற்று நாவலை முதலில் தமிழுக்கு 1895 இல் அறிமுகம் செய்தவர் திருகோணமலை தம்பிமுத்துப்பிள்ளை சரவணமுத்துப்பிள்ளை (1865 -1896) அவர்களே. மதுரை நாயக்க அரசர்களின் வரலாற்றைத் தளமாகக் கொண்ட மோகனாங்கியே தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்று தமிழ் இலக்கிய வரலாறு பெருமையுடன் பதிவு செய்துள்ளது. உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதப்பட்ட மோகனாங்கியில் அக்காலச் சமூக வளர்ச்சியை மீறிய சீர்திருத்தக் கருத்துக்களுடன், பெண் அடக்குமுறைக்கு எதிரான விமர்சனங்களும் இழையோடி இருப்பது அதன் முக்கியத்துவத்தை வியப்புடன் இரட்டிப்பாக்கின்றது.


Prof V.Zvelebil அவரது The First Six Novels in Tamil என்ற ஆய்வுரையில் ''மிக ஆழமான வரலாற்று தேடலில் மோகனாங்கி கட்டமைக்கப்பட்டது'' என குறிப்பிடுகின்றார். சரவணமுத்துப்பிள்ளையும் அவரது புகழ் வாய்ந்த சகோதரர் கனகசுந்தரம்பிள்ளையும் 15 வயதில் பட்டக் கல்விக்காக திருகோணமலையில் இருந்து 1880 இல் இந்தியா சென்றார்கள். இவர்கள் செங்கல்வராயன் உயர்நிலைப் பள்ளியியிலும், அதன் பின்னர் பிரசிடன்சி கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார்கள்.

இலங்கையின் நாவல் இலக்கிய முன்னோடிகள் இவர்களே. தி.த.சவின் தொடக்கப் புள்ளியில் இருந்தே தமிழ் வரலாற்று நாவல் தமிழகத்தில் பரினாமாம் பெறத் தொடங்கியது.. ஆய்வாளர்களாலும், இலக்கியவாதிகளாலும் தேடப்பட்டும் இதுவரை பார்வைக்கு எட்டாமல் இருந்த மோகனாங்கியை 31.1.2018 இல் திருகோணமலை வெளியீட்டாளர்கள் வெளியிடத் தீர்மானித்துள்ளார்கள்.

திருகோணமலை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் வரலாற்றுப் புகழ்மிக்க மோகனாங்கியை ஆசிரியரது பிறந்த மண்ணில் இருந்து மீண்டும் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமையடைகின்றோம். இனி மோகனாங்கி இலக்கிய உலகில் புதுப் பொலிவுடன் என்றும் வலம் வருவாள் . மோகனாங்கி வெளியீட்டுப் பயணத்தில் எங்களுடன் சேர்ந்து பயணித்த நண்பர்கள் ச.சத்தியதேவன், மு.மயூரன், விகடன் ஓவியர் ஷியாம் ஆகியோருக்கு நன்றி.

கனகசபாபதி சரவணபவன் 
திருகோணமலை வெளியீட்டாளர்கள்




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. வணக்கம் ஐயா. இந்தநூல் தேவை. எப்படி வாங்குவது?

    ReplyDelete
  2. தொடர்புகொள்ள திரு.சற்குணம் சத்தியதேவன்

    ReplyDelete