Tuesday, December 05, 2017

G.C.E. (O/L) மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் - புகைப்படங்கள்


தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையினை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் பாட அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்குபடுத்தப்படும் இக்கருத்தரங்குகள் பாடத்தில் தேர்ச்சி பெற்ற திருகோணமலை வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


வளவாளர்களுக்குரிய கார்த்திகை மாதக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான உதவிகோரல் பாடசாலை அதிபரிடம் இருந்து எமக்குக் கிடைக்கப்பெற்றது. இவ்வேண்டுகோளை உடனடியாக ஏற்று உதவிட அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்துவரும் நண்பன் முன்வந்தார்.


மாணவர்களின் பாட அடைவு மட்டத்தினை விருத்தி செய்யும் நோக்குடன் இடம்பெற்றுவரும் இக்கருத்தரங்குகளின் கார்த்திகை மாதத்துக்கான வளவாளர்களுக்கான கொடுப்பனவுகளை நன்கொடையாளர்  பாடசாலைக் கணக்கிற்கு நேரடியாக வைப்புச் செய்திருந்தார்.

பெயர் குறிப்பிட விரும்பாத  நன்கொடையாளர்  சார்பாக  திருகோணமலையில் வதியும் அவரது தந்தையினை ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலய சமூகம் கௌரவித்து தனது நன்றியினை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நகரப்பகுதி மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் போலவே கிராமப்பகுதி மாணவர்களும் கற்றல் செயற்பாடுகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இக்கருத்தரங்குகள் தொடர்ந்து வரும் வருடங்களிலும் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டில்

01. தைமாதத்தில் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகளும்
02. வருட இறுதியில் சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்குகளும் இடம்பெற உள்ளன.

இவற்றிற்கு உதவ ஆர்வமுள்ள நலன்வரும்பிகள், நன்கொடையாளர்கள் , பழைய மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு....

தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயம்
தொலைபேசி 026 2248081


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: