இலங்கையில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிததாக இனங்காணப்படுவதாகவும் அவற்றில் 15 சதவீதமானோர் மார்பக புற்றுநோயாளிகள் என்றும் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது.
2009 ஆம் ஆண்டில் இலங்கையில் மார்புப் புற்றுநோயினால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 18 சதவீதமாக இருக்கையில் 2017 ஆம் ஆண்டில் அது 22 சதவீதமாக அதிகரித்திருக்கின்றது. அதாவது இலங்கையில் 40 பெண்களில் ஒருவர் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆபத்தினை எதிர்கொள்கின்றார்.
புதிதாக நாளுக்கு 6 -7 பேர் வரை மார்பக புற்று நோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகின்றனர். 45 முதல் 60 வயது வரையான பெண்களே பெரும்பாலும் மார்பக பற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மனிதர்களிடத்தில் ஏற்படும் புற்றுநோய்களில் ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் குணப்படுத்தக்கூடியநோயாக மார்பகப் புற்றுநோய் மருத்துவ உலகினால் இனம் காணப்பட்டுள்ளது,
இலங்கையில் தொற்று நோயிலும் பார்க்க புற்றுநோய் போன்ற தொற்றாநோய்களால் ஏற்படும் மரணங்களே தற்போது அதிகளவானவையாக உள்ளன. அதற்கு பிரதான காரணம் தொற்று நோய்க்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் புற்றுநோய்போன்ற தொற்றாநோய்கள் விடயத்தில் காண்பிக்கப்படுவதில்லை என்பதுதான்.
No comments:
Post a Comment