
பொலநறுவைக் காலத்துப் படைப்பற்று (மறைந்து போன சிலாசாசனம் ) என்னும் உபதலைப்புடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்ட ‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’என்ற இக்கட்டுரை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டுக்கான புரட்டாதி மாத பண்பாடு என்ற சஞ்சிகையின் முதல் கட்டுரையாக வந்திருந்தது. வாசித்து, வாசித்து மனப்பாடம் ஆகிப்போன அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் கீழே.
இச்சாசனம் தம்பலகாமம் என்னும் ஊரின் பெயரினைக் குறிப்பிடும் முதலாவது தமிழ் ஆவணம் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. அத்தோடு புராதானமான இப்பெயர் ஏறக்குறைய 800 வருடங்களாக இடையறாது வழங்கி வருகின்றது என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துவிடுகிறது. இந்த சாசனம் தம்பலகாமம் என்ற இடப்பெயரின் தொன்மையைப் பதிவு செய்வதோடு அது அக்காலப்பகுதியில் கொண்டிருந்த அரசியல் , சமுதாய முக்கியத்துவத்தினையும் விபரிக்கிறது.

பேராசிரியர் சி.பத்மநாதன்
தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்
No comments:
Post a Comment