போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 141 சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு
25.10.2017 அன்று பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.
கனடாவில் உள்ள திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், சங்க அங்கத்தவர்களின் குடும்பங்கள், அவர்களது நண்பர்கள் இணைந்து மேற்படி ஊட்டச்சத்து உணவுக்கான நன்கொடையினை வழங்கி இருந்தார்கள்.
மிதமான ஊட்டச்சத்து இன்மை (MAM), கடுமையான ஊட்டச்சத்து இன்மை (SAM) ஆகிய போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 141 பிள்ளைகளுக்கான ஊட்டச்சத்து உணவே இரண்டாம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
நீண்டகாலம் இடம்பெற்றுவந்த யுத்த அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் மிகவும் பின்தங்கியவர்களாக இக்கிராம மக்கள் காணப்படுகிறார்கள். எனவே இவர்களது வாழ்வாதாரத்தினை மேன்படுத்துவதே இக்கிராமங்களில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே அதற்கான முன்னகர்வுகளை அரச, தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், பொதுமக்களின் ஆக்கபூர்வமான பங்குபற்றுதலுடனும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் நாம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில்
பார்க்க-பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. புகைப்படங்கள்
இக்கிராமங்களில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
பார்க்க-பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. புகைப்படங்கள்
இக்கிராமங்களில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மேற்படி தரவுகளின் அடிப்படையில் விடுக்கப்பட்ட உதவிகோரலுக்கு திரு. பாஸ்கரன் தினேசன் (செயலாளர்) அவர்களின் முயற்சியினால் கனடாவில் உள்ள கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் உடனடியாக உதவிட முன்வந்தனர்.
25.10.2017 ஆம் திகதி பாட்டாளிபுரம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் Dr. சரவணபவன் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட சந்துணவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் முந்நாள் அதிபர் மா.இராசரெத்தினம் அவர்கள் கலந்துகொண்டு ஊட்டச்சத்து உணவுகளை நேரடியாக பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு திறம்பட நடைபெற பொது சுகாதார மருத்துவ மாது திருமதி. காளீஸ்வரி, தன்னார்வத் தொண்டர் திருமதி. ஜெயஸ்ரீ ( பொன்னந்தி ) ஆகியோர் உதவினர். அத்துடன் போசாக்கின்மை தொடர்பான அறிக்கை தயாரித்து உதவிய நண்பன் திரு. கஜபதி (PhD, Lecturer in
Zoology, University of Jaffna) சத்துமா கொள்வனவில் உதவிய திரு. சக்திமயூரன்
(Capital pharma corner, Trincomalee) ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.
பாட்டாளிபுரமும் அதனை அண்டிய கிராமங்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ சேவைக்கான பௌதீக வளங்களை வழங்கி வருவதோடு
பார்க்க - ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்
இக்கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை மேன்படுத்த பல துறையினரையும் ஒன்றிணைத்து செயற்பட்டு வருபவரான Dr கேதீஸ்வரன் (Australian Medical Aid Foundation: AMAF) அவர்களது ஆலோசனைகளுடனும், Dr. கயல்விழி (Regional Director of Health Services, Trincomalee) அவர்களது நிர்வாக ஒத்துழைப்புகளுடனும், Dr. சரவணபவன் (Registrar, Community Medicine) அவர்களது கண்காணிப்பிலும் ( சிறுவர்களது போசாக்கு நிலை) இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பார்க்க - ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்
இக்கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை மேன்படுத்த பல துறையினரையும் ஒன்றிணைத்து செயற்பட்டு வருபவரான Dr கேதீஸ்வரன் (Australian Medical Aid Foundation: AMAF) அவர்களது ஆலோசனைகளுடனும், Dr. கயல்விழி (Regional Director of Health Services, Trincomalee) அவர்களது நிர்வாக ஒத்துழைப்புகளுடனும், Dr. சரவணபவன் (Registrar, Community Medicine) அவர்களது கண்காணிப்பிலும் ( சிறுவர்களது போசாக்கு நிலை) இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
2004 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கனடா பழைய மாணவர் சங்கம் Dr. ஞானி நிதியத்திற்கு ஊடாக கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 20 சாதாரண தர ( OL ) , உயர்தர ( AL ) மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்விக்கான உதவித்தொகையினை 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வழங்கி வந்தனர்.
அத்துடன் பாடசாலை பழையமாணவர் சங்கம் ( திருமலை ) தனது 75வது நிறைவு விழாவினைக் கொண்டாடியவேளை பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் மண்டபத்தினை நிர்மாணித்துக் கொடுத்தனர். இவைதவிர கனடாவில் பல ஒன்றுகூடல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியதோடு அந்நிகழ்வுகளின் பதிவுகளாக ‘கனடா சாரல்’ என்ற சஞ்சிகையையும் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Dr.த.ஜீவராஜ்
(நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)
Dear Members, Supporters
& Well-wishers,
We are writing to inform you about first ever, little charitable program
sponsored by us – which is happening in Paatalipurm, Muthur – with leading efforts
from Trinco Konewara Hindu Old Boys at home.
The following are the facts about what is happening:
Name: Project Paatalipuram
0.1 – “முதல் படி”
Location: East of Muthur,
Trincomalee
Cause: Improve health of 141 children affected
by lack of nutrition (i.e malnourished kids)
Commitment: Supply nutrition foods
for next 6 months
Status: So far, donated for
the month of Sep & Oct 2017 – 4 more months to be sponsored
Project Lead (OBA Canada): P. Thineshan, Canada
Coordinator, “Project
Paatalipuram”: Dr.P.Ketheswaran (Australian Medical Aid Foundation: AMAF)
Contributors: “Konewara Hindu Old
Boys Family & Friends - Canada & Trincomalee”, Dr.T.Jeevaraj
(www.geevanathy.com), Dr.Kayalvili, Dr.Saravanabavan, Dr.Sarveswaran, Dr.K.Gajapathy
PhD, Mr.Henry Amalraj (Assist RR Sri Lanka), Mr.Siva Ratnatheepan (Patron- Trinco HC OBA -UK)
YOUR IMPACT: BUILDING BETTER FUTURE FOR KIDS IN HOMELAND, ESPECIALLY AT WAR
AFFECTED AREA
For further questions, please contact us. Thank you in advance for your
contribution. Let’s work together to make a difference for our next generation.
Sincerely,
Committee Members 2017-18
Address:
109 Robbinstone Dr, Scarborough, ON, M1B 2C5 Canada.
E-mail:
info@trincohinduoba.ca
Maintaining the sustainability is noble
ReplyDeleteKeep going anna
Keep up this great work!!!
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete