2006 இல் இடம்பெற்ற மாவிலாறு யுத்தம் இவ்வூர் மக்களை பலத்த பொருளாதார, உயிர் இழப்புகளுடன் வாகரை ஊடாக மட்டக்களப்பு நோக்கி அகதியாக்கியது. 2007 ஆம் ஆண்டில் கிளிவெட்டி முகாமில் தங்கவைக்கப்பட்ட இம்மக்கள் 2009 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு கட்டங்களாக மீள்குடியமர்த்தப்பட்டார்கள்.
நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு
04.10.2017 அன்று வீரமாநகரைச் சேர்ந்த திரு க.பண்பரசன் காண்டீபனால் நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட காணொளிப்பதிவு இது.
இக்காணொளிப்பதிவினைப் பார்த்தபின் இந்த அவலம் தொடர்பில் நம்முன் உள்ள நடைமுறைச் சாத்தியமான வழிகள் சில.......
01. இலக்கந்தை கிராமத்தில் மூன்று குழாய்க் கிணறுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே பாவனையில் உள்ளது. எனவே பழுதான இரு குழாய்க் கிணறினையும் திருத்தம் செய்ய முயற்சிக்கலாம்.
02. பொதுக்கிணறு இரண்டும், பாடசாலைக் கிணறு ஒன்றும் அக்கிராமத்தில் இருக்கிறது. இவற்றில் ஒன்றில் மட்டுமே ஒரு அடி ஆழத்திற்கு தண்ணீர் இருக்கிறது. எனவே இவற்றினை ஆழப்படுத்தி உதவலாம்.
03. குழாய் நீர் வசதிபெற உதவலாம்
04. இவையெல்லாம் நடைமுறைச்சாத்தியம் அடையும்வரை தற்காலிகமாக அம்மக்கள் குடிநீர் வசதிபெற உதவலாம்.
உதவும் மனம் படைத்த நல்லுள்ளங்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம்.
'' நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு ''
வான்சிறப்பு - திருக்குறள்
வான்இன்று அமையாது ஒழுக்கு ''
வான்சிறப்பு - திருக்குறள்
நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com
இன்று வரை அரசியல் வாதிகளை நம்பி நம்பி ஏமாந்தவர்களாக சொந்த ஊரையுமிழந்து குடிநீருக்கே அல்லாடும் நிலையில் தவிக்கும் இம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்
ReplyDelete