பாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு Australian Medical Aid Foundation (AMAF) இனால் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் 25.07.2017 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
2011 இன் இறுதிப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனமான ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியத்தினால் (யுனிசெப்) கட்டி முடிக்கப்பட்ட பாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் நீண்டகாலமாக வைத்தியர் இல்லாமையால் இயங்காமல் இருந்தது.
இக்காலப்பகுதியில் மூதூர் தள வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் வைத்திய வசதி தவிர்ந்து நிரந்தரமான மருத்துவ வசதி எதுவும் இம்மக்களுக்கு கிடைக்கவில்லை.
இதனால் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திய உதவி பெறுவதற்கு 10Km தொலைவிலுள்ள மூதூர் வைத்தியசாலைக்கே செல்லவேண்டிய நிலை இருந்தது. வைத்திய வசதிகள் இல்லாமையும், பாதைகளின் சீரின்மையும், பொருளாதார, போக்குவரத்து வசதியின்மையும் சேர்ந்து அவர்களது வாழ்வினை அவலவாழ்வாக்கியது.
திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் திருமதி கயல்விழி அவர்களின் முயற்சியால் மிக அண்மையில் பாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்குவதற்கான ஒழுங்குகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. அத்துடன் அதனைத் தொடர்ச்சியாக, முழுமையாக இயக்குவதற்கான முன்னகர்வுகளை அவர் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் 24 மணி நேர ஒலிபரப்பு சேவையான தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையூடாக இம்மக்களின் குறைகளை வெளியுலகிற்கு சொல்லும் வாய்ப்பு திருமதி. ஜெயஶ்ரீக்குக் கிடைத்தது.
காலச்சக்கரம் என்ற நிகழ்ச்சியூடாக Dr. பொன். கேதீஸ்வரன் ( Consultant Radiologist) அவர்களுடன் தொடர்புகொண்ட பொன்னந்தி எனும் புனைப்பெயர் உடைய திருமதி. ஜெயஶ்ரீ இப்பிரதேச மக்களின் குறைகளை அவருக்குத் தெரியப்படுத்தினார்.
இந்த வேண்டுகோளுக்கு இணங்க ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் Dr. பொன். கேதீஸ்வரன் அவர்களினால் Australian Medical Aid Foundation (AMAF) சார்பாக பாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.
மருத்துவ உபகரணங்கள்
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பணிமனையினால் பொருட்கள் பாரமேற்கப்படுதல்.
மருத்துவ உபகரணங்கள் Dr. பொன். கேதீஸ்வரன் அவர்களினால் Australian Medical Aid Foundation (AMAF) சார்பாக பாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு வழங்கிவைக்கப்படுதல்.
நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.கே.கருணாகரன் அவர்கள் Australian Medical Aid Foundation (AMAF) இன் பாட்டாளிபுர மக்களுக்கான சேவைகளைப் பாராட்டியதோடு பாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் சேவைகள் மிகவிரைவில் மேன்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
ஜீவன்.
admin@geevanathy.com
Dear Dr.
ReplyDeleteIt is our duty to thank the Australian Medical Aid Foundation for providing medial faculties to remote villages in Muthur area. Our Political leaders also contribute their one month salary for such things. Kernipiththan Arulanantham
உதவி தேவையான இடம் பாட்டாளிபுரமும் அதனை அண்டிய 8 கிராமங்களும்.
ReplyDelete