Wednesday, April 26, 2017

விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


விசேட தேவையுள்ள குழந்தைகளின் கற்றல் ,சமூக, பொருளாதார விடையங்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு திருகோணமலையில் செயற்பட்டுவரும் நிறுவனம்  HOPE நிறுவனமாகும்.

2015 ஆம் ஆண்டுமுதல் செயற்பட்டுவரும் இந்நிறுவனத்தில் தற்போதைய நிலையில் 26 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுடைய கல்விச் செயற்பாடுகளுக்கான உபகரணங்களின் தேவை குறித்து அதன் இயக்குனர் திரு.கிருபாகரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

HOPE நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு கல்விபயிலும் விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு உதவ கனடாவில் வசிக்கும் எனது பாடசாலைக்கால நண்பர்களான திரு. பாஸ்கரன் தினேசன் , திருமதி வளர்மதி தினேசன் தம்பதிகள் விருப்புடன் முன்வந்தனர். அவர்கள் வழங்கிய கற்றல் உபகரணங்கள் திருமதி வளர்மதி அவர்களின் தாயாரால் 24.04.2017 அன்று HOPE நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது. 

 

விசேட தேவையுள்ள குழந்தைகளின் கைவண்ணங்கள்

 


தொடர்புகளுக்கு
S.Kirubaharan ( CBR worker)   Director
T.P:- +94-076 329 3125
Facebook:-hopecbr
Skype:-kirubaharan12
web site:-www.hopecbr.org  



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. இவ்வாறான பணிகள்
    தொடர வேண்டும்
    பாராட்டுகள்

    ReplyDelete