Thursday, March 16, 2017

டெங்கு காய்ச்சல் (Dengue fever) - திருமலை நிலவரம் 15.03.2017


நாடுமுழுவதும் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) தாக்கம்  இந்த ஆண்டின்  (2017) தொடக்கத்தில் இருந்து அதிகரித்துக் காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் முன்னொருபோதும் இல்லாதவகையில் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) பாதிப்பு உணரப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) தாக்கம் பற்றி திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கிடைக்கப்பெற்ற தரவுகள் கீழே.




இந்த ஆண்டின் 15.03.2017 வரையான காலப்பகுதியில் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, மூதூர் , திருமலை நகரப்பகுதி, உப்புவெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் கிண்ணியாப் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது..



இந்த ஆண்டின் முதல் பத்துக் கிழமைகளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஈச்சிலம்பற்று, குமரன்கடவை (கோமரங்கடவெல), கந்தளாய், கிண்ணியா,குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர்  ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு காய்ச்சலினால் (Dengue fever) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலே தரப்பட்டுள்ளது.



பதிநகர்(பதவிசிறிபுர), சேருவில் (சேருவில), தம்பலகாமம் (தம்பலகமுவ), திருகோணமலை நகரப்பகுதி, உப்புவெளி  ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு காய்ச்சலினால் (Dengue fever) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலே தரப்பட்டுள்ளது.


திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) தாக்கம் அதிகம் இருக்கும்  கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, மூதூர் , திருமலை நகரப்பகுதி, உப்புவெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் கடந்த 5 நாட்களின் தரவுகள் (15.03.2017 புதன்கிழமை வரையான) .

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனம் காணப்பட்டிருந்தாலும் கிண்ணியா பிரதேசத்தில் நிலைமை மோசமாகக் காணப்படுகின்றது.

இலங்கையில் டெங்கு நோயினால் இந்த ஆண்டின் 15.03.2017 வரையான காலப்பகுதியில் 21541 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். முழுமையான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ( தரவுகள் உதவி - நன்றி திரு.J.நசார்டீன் )

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. அருமையான தகவல்
    நம்மவர் முற்காப்புத் தேவை!

    ReplyDelete