Monday, November 28, 2016

ஈழ , சோழ மண்டல பேச்சுத்தமிழ் (1941) - சுவாமி விபுலானந்தர்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சுவாமி விபுலாநந்தர் பிறந்தார். 1912ஆம் ஆண்டுகளில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமைபுரிந்த இவர் 1915 ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 இல் அறிவியலில் பட்டத்தைப் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார்.

மயில்வாகனன்  எனும் இயற்பெயர்  உடைய இவர் 1924 இல் சென்னை சென்று இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து  துறவறம் மேற்கொண்டு ”சுவாமி விபுலானந்தர்” என்னும் பெயர் பெற்றார்.

1925ல் இலங்கை திரும்பிய அடிகளார் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை , மலையகம் ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளில் சிறந்த கல்வித் தொண்டாற்றினார். தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டில் தலைசிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும்.

மொழியியல் , அறிவியல் அறிஞராக, கலைஞராக, ஆத்மீக ஞானியாக, ஆற்றல்மிகு பேராசிரியராக விழங்கிய இவர் எழுதிய சோழ மண்டலத்துத் தமிழும், ஈழ மண்டலத்துத் தமிழும் என்ற கட்டுரை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கத்தக்கதான கலைமகள் கதம்பம் என்ற தொகுப்பு நூலிலேயே அக்கட்டுரை இடம்பெற்றிருந்தது. மிகவும் சேதம் அடைந்திருந்த இந்நூலினை கவனமாக பாதுகாத்து வருவதோடு , அதனை வாசிப்பதற்காக எமக்குத் தந்துதவிய மருந்துக் கலவையாளர் திரு. கிருபானந்தன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

சோழ மண்டலத்துத் தமிழும், ஈழ மண்டலத்துத் தமிழும் என்ற அக்கட்டுரையில் சுவாமி விபுலானந்தர் அவர்கள் ஈழ , சோழ மண்டல பேச்சுத்தமிழ் பற்றி விரிவாக ஆராய்துள்ளார்.

தமிழ்மொழி ஒலியியல் ( The phonetics of the Tamil language ) இல் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு அவரது ஆய்வு முடிவுகள் பயன்தரும் என்பதனால் கீழே அதனைப் பகிர்கிறேன். நன்றி கலைமகள் கதம்பம்.

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com
28.11.2016.




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment