Thursday, October 27, 2016

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2016 - புகைப்படங்கள்


கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழிநுட்பக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புணர்வாழ்வு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2016 ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழா 20,21,22 (10. 2016) ஆகிய தினங்களில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களையும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் வருடாந்த இந்த தமிழ் இலக்கிய விழா நடாத்தப்படுகின்றது. இந்த மாகாண இலக்கிய விழாவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் இருந்து சிறந்த நூல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கலைத்துறைக்கு பெரும்பங்காற்றிய மூத்த கலைஞர்கள் 12 பேர் வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இளம் கலைஞர்கள் 18 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கலாபூசணம் வே. தங்கராசா அவர்கள் வித்தகர் விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டார். நிகழ்வின் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.                                                  
 ஜீவன்






இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete