இங்கிலாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் “முல்லை அமுதன்” அவர்கள் தொகுத்தளித்திருக்கும் “இலக்கியப் பூக்கள் ” என்னும் நூலின் இரண்டாவது தொகுதி சென்னை “காந்தளகத்தின்” தயாரிப்பில் வெளிவந்திருக்கின்றது.
ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், சிறந்த தமிழ் அறிஞர்கள், இணையற்ற சாதனை படைத்த இலக்கியவாதிகள், பத்திரிக்கையாளர்கள் என்று நீண்டு செல்கின்றது அவர் தொகுத்தளித்துள்ள பெருமக்களின் பட்டியல். அமரத்துவம் அடைந்து விட்ட சாதனையாளர்களை அவர்கள் காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ளமை இந்நூலில் காணப்படும் பெருஞ் சிறப்பாகும்.916 பக்கங்களில் அமைந்துள்ள இந்நூலின் இந்திய விலை 990 ரூபாய் என்பதும் இலங்கை விலை 2970 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டுரையாளர்களை அவர்களது புகைப்படங்களுடனும், அவர்கள் தொடர்பான சிறுகுறிப்புகளுடனும் தொகுப்பாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளது. அவரது ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
எவ்வித காய்த்தல், உவத்தலுமின்றி சமூக, சமய வேறுபாடுகள் இன்றி ஐம்பத்தாறு அறிஞர்கள், சாதனையாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூலிலுள்ள புலமை மிக்க பலரது வாழ்க்கை வரலாறு நம்மை பிரமிக்க வைக்கின்றன. பலரும் வியக்கும் அளவுக்கு எமது கலைஞர்களின் படைப்பாக்கங்கள் மிக உயர்ந்த தரத்தில் அமைந்திருந்தன என்ற உண்மையை இந்நூலை ஆழமாகக் கற்பதின் மூலமாக நாம் அறியக்கூடியதாக உள்ளது.
இத்தகைய அற்புதமான தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டுள்ள “முல்லை அமுதன்” அவர்களின் பணியை எப்படிப் புகழ்வதென்றே விளங்கவில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் இத்தகைய சிறந்த நூலை வாங்கி பயன் பெறுவது காலத்தின் கட்டாயமாகும்.
வளர்க அவர்தம் பணி!!
- வேலாயுதம் தங்கராசா
வணக்கம்
ReplyDeleteஐயா
படிக்க வேண்டிய நூல் சிறப்பாக தொகுத்து வெளியீடு செய்த முல்லை அமுதன் அண்ணாவுக்கு நன்றிகள் பல...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-