Friday, October 09, 2015

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 11.10.2015


தம்பலகாமத்தில் இரு நூல்களின் வெளியீட்டு விழா.
(11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி )

திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் 22 கவிதைகள் அடங்கிய ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்’ என்ற தலைபில் அமைந்த கவிதைத் தொகுப்பும், அவரது மகன் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் .வே. தங்கராசா எழுதிய தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ‘போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்’ என்ற நூலும் எதிர்வரும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில் நுட்பக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் கௌரவ சி.தண்டாயுதபாணி அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வரலாற்று ஆய்வாளர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன், திரு.நடராசா பிரதீபன் (உதவி அரசாங்க அதிபர், மாவட்டச் செயலகம், திருகோணமலை) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

கலாசார உத்தியோகத்தர் குணபாலா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஶ்ரீபதி நிகழ்த்த, நூல் அறிமுக உரையை கேணிப்பித்தன் கலாபூசனம் ச.அருளானந்தம், கவிமணி அ.கௌரிதாசன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.

திரு.தி.தரணீதரன் (அறிவிப்பாளர் சூரியன் FM ) இந்நிகழ்வினைத் தொகுத்து வழங்க உள்ளார்.அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.






இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: