கப்பல்துறைக் கிராமத்தில் இயங்கும் இளைஞர் கழகத்திற்கு 16.10.2015 அன்று விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு செய்யப்பட்டது. பிரித்தானியாவில் வசிக்கும் திரு. ஏரன் அரசசிங்கம் (MR. AARAN ARASASINGAM) அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்களை திரு.ஜெயக்குமார், திருமதி. மங்களா ஜெயக்குமார் தம்பதியினர் வழங்கி வைத்தனர்.
கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60 மாணவர்கள் நான்கு தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். நிரந்தரக் கட்டடமின்றி ஆலய மண்டபத்தில் இயங்கிவரும் இப்பாடசாலை மாணவர்களின் தேவை கருதி ஆலய வளவில் அறநெறிப்பாடசாலை அமைப்பது பற்றிய கலந்துரையாடல் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து இடம்பெற்றது.
அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், சத்துணவு வழங்குதல் என்பனவற்றிற்கு தொடர்ச்சியாக உதவிவரும் பிரித்தானியாவில் வசிக்கும் திரு.ஜெயக்குமார், திருமதி. மங்களா ஜெயக்குமார் தம்பதியினருடன் இந்த உதவிகளை திருகோணமலையில் இருந்து நெறிப்படுத்தும் திருமதி. கௌரி அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment