மாவட்ட மட்ட விகிதாசார முறைமை
அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தகுதியற்றதாக்கப்படும். எஞ்சிய செல்லுபடியான வாக்குகள், விகிதாசாரக் கணிப்பீட்டு அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்குவதற்காக, கணக்கில் எடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகூடிய எண்ணிக்கையான வாக்குகளைப் பெறும் அரசியற் கட்சி அல்லது சுயேட்சைக்குழு மேலதிகமாக ஓர் உறுப்பினரைத் தெரிவு செய்யப்பட்டவராக அறிவிப்பதற்கான உரித்தையும் கொண்டுள்ளது (மேலதிக ஆசனம்). எஞ்சிய எண்ணிக்கையான ஆசனங்களுக்கு, அரசியற்கட்சியால் அல்லது சுயேச்சைக் குழுவால் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் நாடாளுமன்ற பிரநிதித்துவம் கணிக்கப்படும் முறை விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டம் ஒன்றின் தேர்தலில் வாக்களிப்பு விபரங்கள் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன.
தேர்தல் மாவட்டம்-X | ||
---|---|---|
| ||
கட்சி | பெற்ற வாக்குகள் | வீதம் |
கட்சி-A | 111747 | 38.71% |
கட்சி-B | 76563 | 26,52% |
கட்சி-C | 55533 | 19.24% |
கட்சி-D | 42121 | 14.59% |
சுயேச்சை-1 | 1611 | 0.56% |
சுயேச்சை-2 | 1130 | 0.39% |
மேலே காணப்படும் தேர்தல் முடிவுகளின்படி கட்சி A கூடிய வாக்குகள் பெற்றிருப்பதால் இத் தேர்தல் மாவட்டத்துக்குரிய மேலதிக இடம் கட்சி-A க்கு வழங்கப்படும்.
இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 5% இலும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் அவை உறுப்பினரைப் பெறும் தகுதியை இழக்கின்றன.
அவ்விரு குழுக்களும் பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகளிலிருந்து கழிக்கப்படும்.
- 288,705 - 1,611 - 1,130 = 285,964 வாக்குகள்
தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை = 7,
ஒரு உறுப்பினர் ஏற்கனவே கட்சி A இற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
மிகுதி = 6. எனவே:
- ஒரு உறுப்பினருக்குரிய வாக்குகள் = 285,964 / 6 = 47,661
கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒரு உறுப்பினருக்குரிய வாக்கினால் வகுக்க:
கட்சி | - | ஈவு | மிச்சம் |
---|---|---|---|
கட்சி-A | 111,747 / 47,661 | 2 | 16,425 |
கட்சி-B | 76,563 / 47,661 | 1 | 28,902 |
கட்சி-C | 55,533 / 47,661 | 1 | 7,872 |
கட்சி-D | 42,121 / 47,661 | 0 | 42,121 |
இப்பொழுது கட்சி நிலைவரம்:
கட்சி | மேலதிக ஆசனம் | சுற்று | மொத்தம் | |
---|---|---|---|---|
1 | 2 | |||
கட்சி-A | 1 | 2 | - | 3 |
கட்சி-B | 0 | 1 | - | 1 |
கட்சி-C | 0 | 1 | - | 1 |
கட்சி-D | 0 | 0 | - | 0 |
மொத்தம் 5 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்னும் 2 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன.
இனி ஒவ்வொரு கட்சிக்கும் மிச்சமாக உள்ள வாக்குகளைப் பார்க்கவேண்டும்.
கட்சி-D ஆகக்கூடிய மிச்சமாக 42,121 வாக்குகளையும்,
கட்சி-B அடுத்ததாக 28,902 வாக்குகளையும் கொண்டுள்ளன.
இதனால் கட்சி-D க்கும், கட்சி-B க்கும் தலா ஒரு உறுப்பினர் கிடைக்கும்.
இனி ஒவ்வொரு கட்சிக்கும் மிச்சமாக உள்ள வாக்குகளைப் பார்க்கவேண்டும்.
கட்சி-D ஆகக்கூடிய மிச்சமாக 42,121 வாக்குகளையும்,
கட்சி-B அடுத்ததாக 28,902 வாக்குகளையும் கொண்டுள்ளன.
இதனால் கட்சி-D க்கும், கட்சி-B க்கும் தலா ஒரு உறுப்பினர் கிடைக்கும்.
முடிவில் கட்சி நிலைவரம்:
கட்சி | போனஸ் | சுற்று | மொத்தம் | |
---|---|---|---|---|
1 | 2 | |||
கட்சி-A | 1 | 2 | 0 | 3 |
கட்சி-B | 0 | 1 | 1 | 2 |
கட்சி-C | 0 | 1 | 0 | 1 |
கட்சி-D | 0 | 0 | 1 | 1 |
அண்மையில் 237 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் (20 ஆவது திருத்தச் சட்டம்) சீர்திருத்தத்திற்கான முன்னகர்வுகள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment