Wednesday, July 08, 2015

ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் பயிலுனர்களை இணைத்துக்கொள்ளல்


சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் துணை மருத்துவ சேவையில் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாடநெறியின் பயிற்சிக்கு இணைத்துக் கொள்வதற்காக க. பொ. த. (உ. த.) பரீட்சையில் 2010, 2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.






தகைமைகள் :
(அ) 2015.08.03 ஆந் திகதியில் 18 வயதிற்குக் குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். உரிய தகைமைகளைப் ப{ர்த்திசெய்யும் 2010, 2011, 2012, 2013, 2014 ஆம் வருடங்களில் க. பொ. த. (உ. த.) சித்தியெய்திய வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன 

(ஆ) பயிற்சியின் பின் இணைத்துக்கொள்ளும் பதவியில் குறைந்தது 10 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும் 

(இ) போதுமானளவு உடல், உள ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் 

(ஈ) தான் விண்ணப்பிக்கும் மாவட்டத்த்திற்குள் விண்ணப்ப முடிவுத்திகதிக்கு கிட்டிய முன்னைய 3 வருடங்கள் தொடர்ச்சியாக வசித்து இருக்க வேண்டும்.

சம்பளம்  - பொது நிருவாக சுற்றறிக்கை 2006 இன்படி (ரூ. 15,080 - 180 *7 - 240 * 3 - 320 * 11 - 360 * 20 - 27,780) சம்பளப்படியின் ஆரம்ப சம்பளப்படியில் வைத்து சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவு திகதி   2015.08.03 

மேலதிக விபரங்கள் 03.07.2015 வர்த்தமானியில் பார்வையிடலாம்.  
த.ஜீவராஜ்

 வேலைவாய்ப்பு - மேலும் வாசிக்க...

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment