Tuesday, May 05, 2015

ஊடகம் பற்றி தமிழில் - Tamil Journalism


ஊடகவியல் (Journalism) அல்லது இதழியல் என்பது, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்காகச் செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய துறை ஆகும்.

முன்னர் இத்துறை அச்சு ஊடகங்களான செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் முதலியவற்றில் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதை மட்டுமே குறித்து வந்தது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மின்னணு ஊடகங்களையும் இது உள்ளடக்கியது. தமிழில் ஊடகவியல் பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்படும் உங்களுக்கான வலைப்பதிவு.


இந்த வலைப்பதிவில் பாடக்குறிப்புக்களுடன் பயிற்சிப் பக்கம், முயன்று பாருங்கள், உதாரணங்கள் போன்ற பகுதிகளையும் இது உள்ளடக்கி இருக்கிறது.
பாடக்குறிப்புக்கள்

ஊடகவியல் சம்பந்தமான துறைசார்ந்தவர்களின் அனுவங்களிலிருந்து வெளிவந்த பாடக்குறிப்புக்களை கற்றுக் கொள்வதூடாக ஊடகவியல் பற்றிய எண்ணக்கருக்களை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

01. வானொலியில் செய்தி
02. செய்திக்குரிய எண்ணம்
03. வடிவமைப்பும், தொடர்பாடலும்
04. தொடர்பாடலில் கேட்டல் கிரகித்தல்
05. வடிவமைப்பு உத்திகள்
06. சித்தரிப்பு அல்லது விவரணம்
07. நேர்காணல்
08. செய்தி தெரிவிப்பாளனின் தகுதிகள்
09. புலனாய்வுச் செய்தி அறிக்கையிடல்
10. அங்க அசைவுகளினூடன தொடர்பாடல்
11. பத்திரிகை வடிவமைப்பின் மூலங்கள்
12. தொலைக்காட்சிச் செய்தித்தெரிவிப்புக்கான கைந்நூல்
13. திருத்தமாக எழுத உதவும் வழிகாட்டி
14. வளர்ச்சி ஊடகக் கோட்பாடு
15. புகைப்படக்கலை
16. ஆழமான செய்தி அறிக்கையிடல்
17.  வெற்றிகரமான ஒரு ஊடக பிரச்சார நடவடிக்கைக்கான கூறுகள்
18. இதழியல் கலைச்சொற்கள்

பயிற்சிப் பக்கம்
இதில் உள்ள பயிற்சிகளை செய்வதனூடாக ஊடகவியல் துறையில் சிறப்புத்தேர்ச்சியைப் பெற முடியும்.

முயன்று பாருங்கள்
இங்கு தரப்பட்டுள்ள தகவல்கள்களோடு பயிற்சி செய்து, ஊடகம் ஒன்றுக்கு ஆக்கம் ஒன்றைத் தயாரிப்பது என்பது பற்றிக் கற்றுக்கொள்ள முடியும்.

உதாரணங்கள்
இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட உதாரணங்கள் பிரசுரமாகின்றன. இவ்வுதாரணங்களை மீண்டும் மீண்டும் கற்றுத் தேர்வதூடாகவும் ஒருவர் ஊடகத்துறையில் பணிபுரியும் ஆற்றலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஊடகத்துறையைத் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய வலைப்பதிவு இது.

தமிழ்ச்சமூகத்தில் ஊடகக்கல்வி

தமிழ்ச்சமூகத்தில் ஊடகக்கல்வி : வாய்ப்புக்களும் சவால்களும்  என்ற பதிவில் இருந்து சிறு பகுதி...

பல்கலைக்கழக மட்டத்திலான தமிழ்ச்சமூகம் சார்ந்த ஊடகக்கல்விக்கான சவால்கள் என நோக்குமிடத்து, இங்கு பட்டப்படிப்பிற்கான அனுமதியைப் பெறும் மாணவர்களில் தமிழ் பேசும் மாணவர்கள் மிகக் குறைவான சத வீதத்தினராக உள்ளமை பிரதான விடயமாகும். அந்தளவில், தீவடங்கிய தேர்ச்சி மட்டத்தினூடாகத் தெரிவாகக்கூடிய இக்கற்கைநெறிக்கு, தமிழ் பேசும் மாணவர்கள் போதியளவில் விண்ணப்பிக்காமை இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகவுள்ளது.

2010 / 11 ம் கல்வியாண்டில் 78 சதவீத சிங்கள மாணவர்களும் (38 / மொத்த இடம் : 49), 22 சதவீத தமிழ்பேசும் (07 தமிழ் மற்றும் 04 இஸ்லாமிய மாணவர்கள்) மாணவர்களும்

2011 / 12 ம் கல்வியாண்டில் 65 சதவீத சிங்கள மாணவர்களும் (39 / மொத்த இடம் : 60), 35 சதவீத தமிழ்பேசும் (17 தமிழ் மற்றும் 04 இஸ்லாமிய மாணவர்கள்) மாணவர்களும்

2012 / 13 ம் கல்வியாண்டில் 71 சதவீத சிங்கள மாணவர்களும் (27 / மொத்த இடம் : 38), 29 சதவீத தமிழ்பேசும் (07 தமிழ் மற்றும் 04 இஸ்லாமிய மாணவர்கள்) மாணவர்களும்

2013 / 14 ம் கல்வியாண்டில் 70 சதவீத சிங்கள மாணவர்களும் (47 / மொத்த இடம் : 67), 30 சதவீத தமிழ்பேசும் (09 தமிழ் மற்றும் 11 இஸ்லாமிய மாணவர்கள்) மாணவர்களும் இக்கற்கைநெறிக்குத் தெரிவாகியுள்ளமை இந்தவகையில் கவனிக்கத்தக்கது.

க.பொ.த. உயர்தரம் நிறைவுற்றதும் மாணவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய அல்லது வழி நடாத்தப்படக்கூடிய தமிழ்ச்சமூகத்தின் பொதுப்புத்தி அடிப்படையிலான மரபார்ந்த கற்கைகளிலிருந்து விலகாத போக்கு, ஊடகக்கற்கைநெறிகள் குறித்த ஆர்வமின்மை அல்லது போதிய விழிப்புணர்வின்மை அல்லது  ஊடகத்தொழில்சார் வாய்ப்புக்கள் குறித்த நம்பிக்கையீனம் ஆகியவை இதற்குக் காரணிகளாக அமையலாம்.

கலாநிதி சி. ரகுராம்
சிரேஷ்ட விரிவுரையாளர் – தொடர்பாடல் கற்கைகள்
திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகம்
‘தராக்கி டி. சிவராம்’ நினைவேந்தல் நினைவுப் பேருரை
முழுமையான ஆக்கத்தை வாசிக்க -  தமிழ்ச்சமூகத்தில் ஊடகக்கல்வி : வாய்ப்புக்களும் சவால்களும்

மேலும் வாசிக்க...

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா

    அறியமுடியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.. தொடருகிறேன்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பதிவு

    ReplyDelete