தம்பலகாமம் சிவசக்திபுரம் அறநெறிப்பாடசாலை மாணாக்கர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் சிவசக்திபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர் திரு.வே.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ்வறநெறிப் பாடசாலையில் 35 மாணாக்கர்கள் கல்வி கற்கின்றனர். இரண்டு ஆசிரியைகள் கடமையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தம்பலகாமம் தங்கநகர் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை மாணாக்கர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் அறநெறிப்பாடசாலையின் தற்காலிக மண்டபத்தில் பொறுப்பாசிரியர் திரு.நா.ஜெயசீலன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இப்பாடசாலையில் 65 மாணவர்களும் 45 மாணவிகளும் கல்வி பயிலுகின்றனர். 04 ஆசிரியைகள் கடமையாற்றுகின்றனர்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழ்பவருமான திரு.பாலேந்திரன் மயூரன் அவர்களின் நன்கொடையில் இப்பொருட்கள் வழங்கப்பட்டன. இவரது உதவியினால் கப்பல்துறைக் கிராமத்தில் இயங்கி வரும் சிவநய அறநெறிப்பாடசாலையில் இயங்குநிலை நூலகமொன்று அண்மையில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பார்க்க -
தம்பலகாமம் பிரதேசச்செயலர் திருமதி.ஜெ.ஸ்ரீபதி கலந்து கொண்ட இந்நிகழ்வினை கலாச்சார உத்தியோகத்தர் திரு.கே.குணபாலா சிறப்புற ஒழுங்கமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திரு.பா. மயூரன்
வணக்கம்
ReplyDeleteஐயா
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நல்ல உள்ளங்களை நாம் எப்போதும் மறக்கமுடியாது... நன்கொடுத்த நபருக்கு எனது வாழ்த்துக்கள். அந்த நிகழ்வை அழகிய புகைப்படங்களுடன் பதிவாக பதிவிட்டமைக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இவ்வாறான அறிஞர்களின் உதவி
ReplyDeleteபாராட்டுக்குரியது.