Monday, April 06, 2015

மாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு


சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின்கீழ் மாணவ தாதியர் பயிற்சியின் பொருட்டு ஆட்சேர்த்துக்கொள்வதற்கு இலங்கை தாதிமார்சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சு
மாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு - 2015


ஏனைய தகைமைகள்.- 

(அ)இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும்.

(ஆ) 2015.04.24 ஆந் திகதியில் 18 வயதிற்குக் குறையாமலும் 28 வயதுக்கு
மேற்படாமலும் இருக்க வேண்டும்.

(இ) உயரம் : 4 அடி 10 அங்குலத்திற்கு (147.3 cm) குறையாதிருத்தல்.

(ஈ) திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும்.

(உ) நாட்டின் எப்பாகத்திலும் சேவையாற்றக்கூடிய உடற்தகைமைகளை
எல்லா வகையிலும் கொண்டிருத்தல் வேண்டும்.

(ஊ) தான் விண்ணப்பிக்கும் மாவட்டத்திற்குள் விண்ணப்ப முடிவுத்திகதியான 2015.04.24 ஆந் திகதிக்கு கிட்டிய முன்னைய (3) வருடங்கள் தொடராக வசித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை உரிய முறையில் பூரணப்படுத்தி கடித உறையினுள்
இட்டு அவ்வுறையின் இடது பக்க மேல் மூலையில் ''மாணவ தாதியர்
பயிற்சியின் பொருட்டு ஆட்சேர்த்துக்கொள்ளல் - 2015"" மற்றும் வசிக்கும்
மாவட்டத்தையும் குறிப்பிட்டு 2015.04.24 ஆந் திகதிக்கு முன்னர் ''பணிப்பாளர்
(நிர்வாகம்) 01, சுகாதார அமைச்சு, 'சுவசிரிபாய", இல. 385, வண. பத்தேகம
விமலவங்ச தேரர் மாவத்தை, கொழும்பு 10"" என்னும் முகவரிக்கு பதிவுத்
தபால்மூலம் அனுப்ப வேண்டும்.

தாதிமார் பாடசாலையொன்றில் பயிற்சிபெறும் காலத்தில் பயிலுநர்களுக்குக் கீழே குறிப்பிடப்படும் வகையில் கொடுப்பனவு வழங்கப்படும் :-

(1) முதலாம் வருடம் - மாதத்திற்கு 12,920 ரூபா

(2) இரண்டாம் வருடம் - மாதத்திற்கு 13,040 ரூபா

(3) மூன்றாம் வருடம் - மாதத்திற்கு 13,160 ரூபா

மேலதிக விபரங்கள் 02.04.2015 வர்த்தமானியில் பார்வையிடலாம்.  
த.ஜீவராஜ்

வேலைவாய்ப்பு 
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா
    தகவலுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    ReplyDelete