Tuesday, April 28, 2015

NDT Admission 2015/ 2016 University of Moratuwa


தொழில்நுட்பவியல் நிறுவனம் - மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கான
அனுமதி – 2015/ 2016

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின், தொழில்நுட்பவியல் நிறுவனத் தினால்
நடாத்தப்படும் மூன்று வருடகால முழுநேர தொழில் நுட்பவியல் டிப்ளோமா
கற்கைநெறிக்குத் தெரிவுசெய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிட
மிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக்கற்கைநெறியானது,
தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கான புதிய நிலையங்களில் நடத்தப்படும்
வரை, மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டிட நிலையங்களிலேயே
நடாத்தப்படும்.

1. பொதுவானவை.- தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கைநெறியானது இரண்டு வருட முழு நேர கற்றலையும், ஒரு வருட
தொழிற்பயிற்சியையும் உள்ளடக்கியது. இதன் கற்கைமொழி ஆங்கிலம் ஆகும்.

கற்கைநெறிகள் பின்வரும் கற்கைத்துறைகளில் வழங்கப் படுகின்றன :-
(அ) கடல்சார் கற்கைநெறி (வகை I) :
(i) கடல்சார் பொறியியல் தொழில்நுட்பம்
(ii) கப்பற்றுறை கல்வியும் தொழில்நுட்பமும்.
(ஆ) ஏனைய கற்கை நெறிகள் (வகை II) :
(i) இரசாயன பொறியியல் தொழில்நுட்பம்
(ii) குடிசார் பொறியியல் தொழில்நுட்பம்
(iii) மின்சார பொறியியல் தொழில்நுட்பம்
(iv) இலத்திரன் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்
தொழில்நுட்பம்
(v) இயந்திரவியல் பொறியியல் தொழில்நுட்பம்
(vi) பல்பகுதிய தொழில்நுட்பம்
(vii) புடவை மற்றும் ஆடைத் தொழில்நுட்பம்.

2. தகைமைகள் :
 வயது மற்றும் பிற தகைமைகள்:
(அ) விண்ணப்பதாரிகள், 31.12.2014 ஆந் திகதியன்று 24 வயதிற்குக் குறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்
(ஆ) 31.12.2014 இல் 20 வயதிற்கு குறைந்த விண்ணப்பதாரர்களுக்கு கப்பற்துறைக் கல்வித் தொழில்நுட்பமும்,கடல்சார் பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்கான அனுமதிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.கடல்சார் கற்கைநெறி (வகை I) இற்கான விண்ணப்பதாரிகள் மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகப் பரீட்சை என்பவற்றுக்கு விசேடமாக தோற்றுதல் வேண்டும்
(இ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ்வரும் ஏதாவது பல்கலைக்கழகத்திலோ (இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தவிர்ந்த) அல்லது உயர் கல்வி அமைச்சின் கீழ்வரும் உயர் கல்வி நிறுவனத் திலோ முழுநேரகற்கை நெறிக்கு பதிவுசெய்து கொண்டுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.


விண்ணப்ப முடிவுத் திகதி.- விண்ணப்ப முடிவுத் திகதியானது 2015,மே மாதம் 22 ஆந் திகதியாகும் (22.05.2015).

மேலதிக விபரங்கள் 24.04.2015 வர்த்தமானியில் பார்வையிடலாம்.  

மேலும் வாசிக்க...
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment