முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை மறுசீரமைப்பு அமைச்சர் திரு.சி.தண்டாயுதபாணி அவர்களும், கௌரவ விருந்தினராக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு.டபிள்யு.ஏ.எல்.விக்ரம ஆராய்ச்சி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. ‘நீங்களும் எழுதலாம்’ஆசிரியர் திரு.எஸ்.ஆர்.தனபாலசிங்கம் அவர்கள் தனது தலைமையுரையில் ‘கொட்டியாபுரத்து சிங்கம்’வரலாற்றுக் குறுநாவல் பற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும் தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைத்தார்.
நூல் அறிமுகவுரையை‘மலைமுரசு’ஆசிரியர் திரு.இரா.ஸ்ரீஞானேஸ்வரன் அவர்கள் ஆற்றினார். நூல்நயவுரையை ஈழத்தின் சிறுவர் இலக்கிய முன்னோடியாகிய ‘கேணிப்பித்தன்’ திரு.ச.அருளானந்தம் அவர்கள் ஆற்றினார். இதனை அடுத்துகௌரவ விருந்தினரின் உரை இடம்பெற்றது. இறுதியாக முதன்மை விருந்தினர் உரை இடம் பெற்றது. வைத்தியகலாநிதி அருமைநாதன் சதீஸ்குமார் அவர்களின் ஏற்புரையுடனும், நன்றியுரையுடனும் நிகழ்வு இனிதுறமுடிந்தது.
மேலும் வாசிக்க...
செய்தியாக்கம் - .வே.தங்கராசா, திரு.வி.குணபாலா
வணக்கம்
ReplyDeleteஐயா
நிகழ்வை நேரில் பார்க்கா விட்டாலும் கண்கவர் புகைப்படங்கள் வாயில் நிகழ்வை அறியத்தந்தமைக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-