Thursday, April 30, 2015

‘கொட்டியாபுரத்து சிங்கம்’ குறுநாவல் வெளியீட்டுவிழா - புகைப்படங்கள்


வைத்தியகலாநிதி அருமைநாதன் சதீஸ்குமார் எழுதிய ‘கொட்டியாபுரத்து சிங்கம்’ வரலாற்றுக் குறுநாவல் வெளியீட்டுவிழா 25.04.2015 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மண்டபத்தில் ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் திரு.எஸ்.ஆர். தனபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Wednesday, April 29, 2015

எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் Higher Educational Institutions in Sri Lanka


இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலங்கையின் உயர்கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய கல்வி வளத்தை பெருக்குவதும் உயர் கல்வி நிறுவனங்கள் வழியாக தகுதியுள்ள சிறந்த மனித வளத்தை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் ஆளணியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

Tuesday, April 28, 2015

NDT Admission 2015/ 2016 University of Moratuwa


தொழில்நுட்பவியல் நிறுவனம் - மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கான
அனுமதி – 2015/ 2016

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின், தொழில்நுட்பவியல் நிறுவனத் தினால்
நடாத்தப்படும் மூன்று வருடகால முழுநேர தொழில் நுட்பவியல் டிப்ளோமா
கற்கைநெறிக்குத் தெரிவுசெய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிட
மிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக்கற்கைநெறியானது,
தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கான புதிய நிலையங்களில் நடத்தப்படும்
வரை, மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டிட நிலையங்களிலேயே
நடாத்தப்படும்.

Friday, April 24, 2015

உலகம் தழுவிய கவிதைப்போட்டி-2015


ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் 
உலகம் தழுவிய கவிதைப் போட்டி

கவிதை எழுத வேண்டிய தலைப்பு.
இணையத் தமிழே இனி..

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்   -    15-05-2015

Tuesday, April 21, 2015

'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள்


நண்பர் Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் சம்­பூரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர்.  சம்பூர் மகா வித்­தி­யாலயம்,  திரு­கோ­ண­மலை ஸ்ரீ கோ­ணேஸ்­வரா இந்துக் கல்­லூரி ஆகி­ய­வற்றின் பழைய மாண­வர். இவர் தற்­போது திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் வைத்தியராக கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறார். சமூக அக்கறையும், இடைவிடாத வரலாற்றுத்தேடலும், மொழிப்பற்றும் கொண்டவர்.

Monday, April 20, 2015

வேலைவாய்ப்பு - வங்கித்தொழில் உதவியாளர்கள் (பயிலுநர்கள்) - இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கி அதன் குழுமத்துடன் இணைந்து கொள்வதற்கு சாமர்த்தியமான,
புத்திக்கூர்மையான, குழுவாக பணியாற்றக்கூடிய இளவயதினரை அழைக்கிறது.

Thursday, April 16, 2015

'பெயர்' சிறப்புத் தொகுப்பு 2002 - புகைப்படங்கள்


2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையிலிருந்து வெளிவந்த சிற்றிதழான விளக்கு இதழின் சிறப்புத் தொகுப்பாக 2002 இல் பெயர் வெளிவந்தது. அவ்விதழிலிருந்து சில பகுதிகள் உங்களின் பார்வைக்கு.......

Wednesday, April 15, 2015

சுவிஸ் ஞானலிங்கேச்சுரர் குடமுழக்கு மலரில் வெளிவந்த கட்டுரை


சுவிற்சர்லாந்து நாட்டில், பேர்ண் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஞானலிங்கேச்சுரர் ஆலய திருக்குடமுழுக்கு பெருவிழா 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது. 

Monday, April 06, 2015

மாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு


சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின்கீழ் மாணவ தாதியர் பயிற்சியின் பொருட்டு ஆட்சேர்த்துக்கொள்வதற்கு இலங்கை தாதிமார்சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Thursday, April 02, 2015

கலாபூசணம் வே.தங்கராசா அவர்களுக்கான பாராட்டு விழா - புகைப்படங்கள்


தம்பலகாமம் நாமகள் சனசமூக நிலையத்தினர் 2014 ஆம் ஆண்டு இலக்கியத் துறைக்கான கலாபூசண விருது பெற்ற கலைஞர் திரு.வே.தங்கராசா அவர்களுக்கு பாராட்டுவிழா ஒன்றினை தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடத்தியது. சங்கத்தலைவர் திரு.மு.வீரபாகு அவர்கள் தலைமையில் இவ்விழா காலை 10.30 மணயளவில் ஆரம்பமாகியது.

Wednesday, April 01, 2015

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாற்றுப் பொக்கிசங்கள் - புகைப்படங்கள்


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா  சிறப்புற இடம்பெற்று வருகிறது. திருகோணமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயம் ஈழத்திலுள்ள தொன்மையான சக்திபீடங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இவ்வாலயத்தின் தோற்றக்காலம் பற்றிய தரவுகள் தெளிவாக கிடைக்கவில்லையாயினும் 11ம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் உள்ளதாக பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.