Friday, March 27, 2015

புகையிரத நிலைய அதிபர் தரம் 3 பதவிக்கான விண்ணப்பங்கள்


இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரத்தின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2015.03.27 ஆந் திகதியன்று 18 வயதிற்குக் குறையாததும் 30 வயதிற்குக் கூடாததுமான இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2015.04.27 ஆகும்.

 விண்ணப்பம் கோரப்படும் பதவி.- புகையிரத நிலைய அதிபர் - தரம் 3.

பதவியின், கடமையின் தன்மை.- இலங்கை புகையிரத திணைக் களத்தின் கீழுள்ள புகையிரத நிலையங்களின் செயற்பாடுகளுக்கு ஏற்புடைய புகையிரத முகாமையாளரின் பிரதிநிதியாக செயற்பட்டு புகையிரத முகாமையாளரினால் குறிப்பாக ஒப்படைக்கப் படும் ஆள் நிருவாகம், நிதி, வாணிப நடவடிக்கை கூட்டிணைப்புச் செயற்பாடு,

சம்பள அளவுத்திட்டம்.- புகையிரத நிலைய அதிபர்-தரம் 3 இற்கான சம்பள அளவுத்திட்டம் (எம்என்-3-2006-ஏ) ரூபா 15,005-4 x 180-6 x 240-11 x 320-20 x 360-ரூபா 27,885 ஆகும்.

கல்வித் தகைமைகள் :
க. பொ. த. (சா. த.) பரீட்சையில் சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு விடயங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (6) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
அத்துடன்
 க. பொ. த. (உயர் தரம்) பரீட்சையில் மூன்று (3) பாடங்களில் (பொதுவான பொதுப் பரீட்சை தவிர்ந்த) ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் (பழைய பாடத்திட்டத்தின்கீழ் மூன்று (3) பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.)

உடற்தகுதி :
(i) சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எப்பிரதேசத்திலும் சேவை புரிவதற்கு சகல உடற்தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.
(ii) பதவியின் கடமைகளை மேற்கொள்ளக்கூடியளவுக்கு போதுமான உடற்தகுதிகளையும் உள தகுதியையும் கொண்டிருத்தல் வேண்டும்.
(iii) உயரம் 5 அடி 4 அங்குலத்திற்கு குறையாமலும், நெஞ்சளவு வெளிச்சுவாசத்தின்போது 32 அங்குலத்திற்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.
(iஎ) 6 x 6 அளவுள்ள கண் பார்வை பரிசோதனையிலும் தகுதி பெறல்வேண்டும்.

வேறு தகைமைகள் :
(i) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
(ii) விண்ணப்பதாரி சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்
(iii) ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
குறிப்பு.- விண்ணப்பதாரி இவ்வறிவித்தல் வர்த்தமானி பத்திரிகை யில்
பிரசுரிக்கப்படும் தினத்தன்று சகல தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆட்சேர்ப்பு செய்யும் முறை.- மேலுள்ள (5) ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தராதரங்களைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளுக்கு திறந்த எழுத்துமூல போட்டிப் பரீட்சையை நடாத்தி விண்ணப்பதாரிகள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் திறமை ஒழுங்கு வரிசையின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மேலதிக விபரங்கள் 27.03.2015 வர்த்தமானியில் பார்வையிடலாம்.  

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா
    தகவலுக்கு நன்றி... தெரிந்தவர்களிடம் சொல்லுகிறேன்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete