Thursday, March 19, 2015

தம்பலகாமம் ‘கலைக்கதிர்’ இலக்கிய மன்றம் - புகைப்படங்கள்


தம்பலகாமம் ‘கலைக்கதிர்’ இலக்கிய மன்ற ஒன்று கூடல் தம்பலகாமம் பட்டிமேடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் திரு.மா.புவேந்திரராசா தலைமையில் 08.02.2015 ஆந் திகதி பிற்பகல் 02.30. மணியளவில் நடைபெற்றது.

தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஓய்வு பெற்ற திருகோணமலை வலயக் கல்விப் ணிப்பாளருமாகிய திரு.கு.திலகரெத்தினம், ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம்.வே.தங்கராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முதிய கலைஞர்களும், இளங்கலைஞர்களும் இவ்வொன்றுகூடலில் மிகுந்த ஆர்வத்துடன் சமூகமளித்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

தம்பலகாமம் பிரதேசச் செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு.வி.குணபாலா அவர்கள் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு இம்மன்றத்தின் நோக்கம், செயற்பாடுகள் குறித்து விபரமாக எடுத்துரைத்தார். இளைப்பாறிய திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.கு.திலகரத்தினம் இளைப்பாறிய அதிபர் கலாபூசணம் திரு.வே.தங்கராசா கலாபூசணம் திரு.கோ.சண்முகராசா ஆசிரியர் திரு.ரி.சிவராசசிங்கம் தம்பலகாமம் பிரதேசச் செயலக உத்தியோகத்தர் திரு.ஹம்சபாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பின்வருவோர் நடப்பாண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்களாகத் தெரிவு பெற்றனர்.
தலைவர்                                                              திரு.மா.புவேந்திரராசா .
உபதலைவர்                                                      திரு.சு.பரமேஸ்வரன்.
செயலாளர்                                                        திருஅ.புஸ்பராசா
உபசெயலாளர்                                                 திரு.மோ.பிரசாத்
பொருளாளர்                                                      திரு.வி.விஐயகுமார்

ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்...
திரு.வே.தங்கராசா
திரு.கு.திலகரத்தினம்
திpரு.செ.அருணகிரி
திரு.வே.தவராசா

‘கலைக்கதிர்’ இலக்கிய மன்றத்தின் நோக்கம்

01. இலக்கிய, கலை, கலாச்சார, நுண்கலை மற்றும் விளையாட்டு முதலியவைகளினூடாக ஒழுக்க விழுமியங்களைப் பேணி எதிர்காலத்தில் நாட்டுக்கு இயைபான மனிதநேய நற்பிரசைகள் கொண்ட மானிட சமுதாயத்தை உருவாக்குதல் இம்மன்றத்தின் குறிக்கோளாகும்.

02. மாற்றத்தின் ஊடாக பாரம்பரியத்தைப் பேணுதல் தூரநோக்காக இம்மன்றம் கருதுகிறது. பாரம்பரிய வரலாறு மற்றும் கிராமிய கலை வளங்களை செம்மைப்படுத்தலும் ஆவணப்படுத்தலும்

03. புதிய கலைஞர்களை உருவாக்குதல் அவர்களை ஊக்கப்படுத்துதல் ஆசிரிய கலைஞர்கள் பாரம்பரியக் கலைஞர்கள் உதவியுடன் புதியவர்களுக்குப் பயிற்சியளித்தல்.

04. வருடந்தோறும் கலைஞர்களைக் கௌரவித்தல்.

05. சமயம் மற்றும் சமூகம் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து ஓங்கச் செய்தல்.

06. கல்வி மற்றும் தொழிற்துறையோடு தொடர்புடையவர்களை கௌரவித்தல்

07. பாரம்பரிய விளையாட்டுக்களை மீளமைத்தலும் இளைஞர்களை விளையாட்டத்துறையில் மிளிரச் செய்தலும் இம்மன்றத்தின் நோக்கமாகும்.


 கலாபூசணம் வே.தங்கராசா 
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா
    வரவேற்க வேண்டிய விடயம்... கலைக்கதிர் இலக்கிய மன்றத்தின் நோக்கங்கள் பற்றி அறிந்தேன்... அத்தோடு மன்றத்தின் இலக்கிய பணி தொடர எனது வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்களின் கருத்துறைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete