Monday, March 23, 2015

கதிர்காமம் அன்றும், இன்றும் (1978) - புகைப்படங்கள்


கதிர்காமம் தென்னிலங்கையில் ஊவா மாகாணத்தில் உள்ள  திசமாறகம உப அரசாங்க அதிபர் பிரிவின்கீழ் மாணிக்க கங்கைக் கரையோரமாக அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற புனித பாதயாத்திரை தலமாகும்.

இவ்வாலயம் தொடர்பான வரலாற்றினை ஆவணப்படுத்தி இருக்கும் ஆசிரியரான திரு.செல்லப்பா சுந்தரலிங்கம் (Chellappah Suntharalingam, 1895.08.19 - 1985.02.11) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், வழக்கறிஞரும் ஆவார். யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர்.


யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, கொழும்பு புனித யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற இவர் 1914 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப்பின்படிப்பு பயின்று, இலங்கை திரும்பி இந்தியக் குடிமைப் பணியில் இணைந்தார். 

1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு ஆனந்தா கல்லூரி அதிபராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிததுறைத் தலைவராகவும் பின்னர் பணியாற்றினார்.

அடங்காத் தமிழன் என்று அறிப்பட்ட அவரது அரசியல்பணி நாடறிந்த ஒன்று. அவரது இந்நூலினை திரு.கிருபானந்தன் அவர்களின் உதவியினால் அண்மையில் வாசிக்கக் கிடைத்தது.

1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் வெளியிட்டிருக்கும் இந்த ஆதங்கங்கள் அனைத்தும் சுமார் 37 வருடங்களுக்குப் பின்னும் குறைவில்லாமல் நாடுமுழுவதும் ஒலித்துக்கொண்டிருப்பதை உணர்வீர்கள்.



த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. ipa kader gaman ila alam maru potu that pothu murgan irkaro ilaiyo buthura anga kondu pita vache tanga ...tamil sonatha manthu alam ipa pere sodam konda thutagitaka tamil ilate athu buthar valatha solu vaga

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    தங்களின் பதிவு வழி வரலாற்றை அறியக்கிடைத்துள்ளது.. வாசிக்க கிடைக்காத புத்தகத்தின் பிரதியை அனைவரின் பார்வைக்கு விட்டமைக்கு நன்றி ஐயா அறியாதவர்கள் அறிய வாய்ப்பு..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தங்களின் கருத்துறைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete