Wednesday, December 24, 2014

ஒளிவிழா - அன்னை திரேசா இல்லம் - புகைப்படங்கள்


ஆர்ப்பரிக்கும் கடல் அலைமோதும் திருகோணமலையில், அழகான லிங்கநகர்ப்பகுதியில், இயற்கை வனப்பு நிறைந்த இடத்தில் அமைந்திருக்கிறது அன்னை திரேசா இல்லம். வெள்ளம் ஏறுவதும் வற்றுவதுமாக இருக்கும் மட்டிக்களி கடலின் அரவணைப்பில் இருக்கும் இந்த இல்லத்தில் 57 சொந்தங்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் பராமரிக்கப்படுகிறார்கள்.

ஆதரவற்றவர்களுக்கான இந்த அரவணைப்பகம் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு இலங்கை,இந்தியா, பங்காளதேசம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் கடமைபுரிகின்றனர்.

இந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களுடன், அயலில் உள்ளவர்களும் இணைந்து ஒளிவிழா நிகழ்வினை 18.12.2014 அன்று ஒழுங்கு செய்திருந்தனர். அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை (திருகோணமலை மறைமாவட்ட ஆயர்) அவர்களின் ஆசியுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் உவர்மலை பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய யூட் சர்வானந்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட சிறுவர்களுடன் மிக உற்சாகமாகக் கலந்து கொண்ட இல்லத்துவாசிகள் பல கலைநிகழ்வுகளை திறம்பட நிகழ்த்தியது குறிப்பிடத்தக்க ‍அம்சமாகும். ஒளிவிழா நிகழ்வுகளும், இல்லத்தில் இருப்பவர்களினால் உருவாக்கப்பட்ட சில கைவினைப் பொருட்களின் புகைப்படங்களின் தொகுப்பும் கீழே.







 

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா
    வயது வித்தியாசம் இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்... சிறுமிகளுடன் பாட்டிமார்களும் சேந்து கோலாட்டம் ஆடுவதை இரசித்தேன் நிகழ்வை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete