Thursday, December 25, 2014

வெள்ள அனர்த்தம் - தம்பலகாமம் - புகைப்படங்கள்


சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்து வரும் அடை மழையினால்16 மாவட்டங்களிலுள்ள 6 இலட்சத்து 47ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவற்றில் அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, அநுராதபுரம். திருகோணமலை, குருநாகல். புத்தளம். மாத்தளை. மன்னார் மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருமழை காரணமாகக் கந்தளாய்க் குளத்தின் வான் கதவுகள் பல திறந்துவிடப்பட்டுள்ளன.


கடும் வரட்சிகாரணமாக வருடத்தின் முதற்பகுதியில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு இந்த மழை வெள்ளம் பெரும் பொருளாதார சேதத்தினை உருவாக்கி இருக்கிறது. 

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த 95 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்படிருந்தனர். தற்பொழுத்து பலர் மீள தங்களது இடங்களுக்குச் சென்றதனால் முள்ளியடியைச் சேர்ந்த13 குடும்பங்கள் (35பேர்) தொடர்ந்தும் பாடசாலையில் தங்கி இருக்கின்றனர். அத்ததுடன் பாலம்போட்டாறைச் சேர்ந்த 5 குடும்பங்கள் (20பேர்) சித்தி விநாயகர் (அ.த.க) பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தம்பலகாமம் முள்ளியடி,நடுப்பிரபந்திடல், சிப்பித்திடல் , முன்மாரித்திடல், ஐயனார்திடல் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள காட்சிகளைப்படங்களில் காணலாம்.


கலாபூசணம் வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    இயற்கையின் வேதனையை யாரிடம் சொல்வோம்....
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இயற்கை அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரில் நாமும் பங்கெடுப்போம்.
    தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete