Thursday, November 20, 2014

கேணிப்பித்தன், சம்பூர் ஸதீஸ் கௌரவிப்பு - புகைப்படங்கள்


2014 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியருக்கான விருது வழங்கும் நிகழ்வு அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையில் நடைபெற்றது. அதில்

திருகோணமலை மாவட்ட கிராமிய பாடல்கள் - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்
சம்பூர் பிரதேசத்தின் தொன்மை - Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார்

விருது பெற்ற இரு நண்பர்களுக்கும் ஜீவநதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.



திருகோணமலை, ஆலங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் ஆசிரியர் , அதிபர், கல்விப்பணிப்பாளர் எனச் சேவையாற்றியவர். கலாபூஷணம் முதலான பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவர் அப்பாவின் (வே.தங்கராசா) நெருங்கிய நண்பர். கவிதை, சிறுகதை , நாவல், கட்டுரை ,நாடகம் எனப்பலதுறைகளிலும் ஈடுபாட்டுடன் உழைப்பவர்.

கேணிப்பித்தன் ச.அருளானந்தம்


எனது  நண்பர் Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் சம்­பூரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர்.  சம்பூர் மகா வித்­தி­யாலயம்,  திரு­கோ­ண­மலை ஸ்ரீ கோ­ணேஸ்­வரா இந்துக் கல்­லூரி ஆகி­ய­வற்றின் பழைய மாண­வர். இவர் தற்­போது திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் வைத்தியராக கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறார். சமூக அக்கறையும், இடைவிடாத வரலாற்றுத்தேடலும், மொழிப்பற்றும் கொண்டவர். அவரது சம்பூர் பிரதேசத்தின் தொன்மை என்ற வரலாற்று நூல் 2013 இல் வெளிவந்திருந்தது.

Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார்

நண்பர்கள் இருவரும் 2014ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட எழுவானில் கலை இலக்கிய பெருவிழா நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்கள். நண்பர்கள்  இருவருக்கும், விருது பெற்ற ஏனைய கலைஞர்களுக்கும் எமது மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.

எழுவானில்
எழுவானில்

நட்புடன் ஜீவன் , தங்கராசா
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. மதிப்பளிக்கப்பட்ட எல்லோருக்கும்
    இனிய வாழ்த்துகள்.
    இவர்கள் பணி
    எங்கள் தமிழைப் பேண உதவுமே!

    ReplyDelete
  2. வணக்கம்
    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete