“ஜீவா நான் ஊருக்கு வந்துவிட்டேன்” என்ற உற்சாகமான குரல் எனது அன்றைய நாளைச் சந்தோசத்துடன் தொடங்கி வைத்தது. நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த அந்தக் குரலுக்குரியவர்
கலாநிதி சரவணபவன் அவர்கள். திருகோணமலையின் பண்டைய வரலாற்றினை இலகுதமிழில் கால ஒழுங்குக்கு அமைய
‘வரலாற்றுத் திருகோணமலை’, ‘காலனித்துவ திருகோணமலை’ என்ற இருநூல்களை ஒழுங்குபடுத்தப்பட்ட வரலாற்று ஆவணங்களாக நமக்கு உருவாக்கித்தந்தவர். பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையான, இனிமையான மனிதர்.