Monday, September 22, 2014

தென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) - புகைப்படங்கள் - 1


இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா  என்னும்   திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் (06.09.2014) அரங்கேற்றப்பட்டது.  கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இராஜரெட்ணம் நடனாலயத்தின் 23வது வருட நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்த நாட்டிய நாடக பக்கப்பாட்டினை சங்கீத வித்துவான் ஸ்ரீ திவாகர் செல்வரட்ணம், இசைக் கலாவித்தகி. திருமதி. பத்மலோஜினி குணராஜசிங்கம் ஆகியோரும், மிருதங்க இசையினை மிருதங்க கலா வித்தகர். சி.காண்டீபன் அவர்களும், வயலின் சி.திருமாறன், மு.பவதாரணன், வீணை எஸ்.வாகீசன், புல்லாங்குழல் செல்வி. கிரிஜா கனகரெட்ணம், ஓகன் வி.செந்தூரன், தபேலா பொன்.விபுலானந்தா ஆகியோரும் வழங்கினர்.

தென்கயிலை வாசா நாட்டிய நாடகத்தில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினுடைய வரலாறு ஆறு கட்டங்களாக விளக்கப்பட்டது.

1. ஆலயம் உருவான வரலாறு
2. இராவணனின் வருகை (இராவணன் வெட்டு,கன்னியா வெந்நீர் ஊற்று)
3. குளக்கோட்டு மன்னனின் திருப்பணி
4. திருஞானசம்பந்தர் பதிகம் பாடியமை
5. போத்துக்கேயரால் ஆலயம் அழிக்கப்பட்டமை
6. மீண்டும் ஆலயம் அமைக்கப்பட்டு இன்றைய நகர்வலம்
சுமார் 5 மணிநேரம் சொற்பமாக கரைந்த உணர்வு ஏற்பட்டது. பிரமாதம்.

விருந்தினர் பதிவு
           



      சி.சசிக்குமார்











இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. வணக்கம்

    இரசிக்கவைக்கும் புகைப்படங்கள்
    கண்டு மகிழ்ந்தேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கோணேஸ்வர வரலாற்றினை இவ்வாறான ஒரு கலை வடிவாகக் காண மனம் விரும்பியிருந்தது. இன்று அதே மண்ணில் கலை நிகழ்வாக ஆடல் பெற்றதறிந்து மனம் மகிழ்கிறது. கோணேஸ்வரம் பாடல் பெற்ற தலம் மட்டுமல்ல இனி ஆடல் பெற்ற தலமும் கூட. ஆடிப் பாடிப் பரவிய அனைவருக்கும், அறிந்திட வழி செய்த உங்களுக்கும் பாராட்டுக்கள். நன்றி
    - இனிய அன்புடன்
    மலைநாடான்

    ReplyDelete
  3. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete