சம்பள அளவுத் திட்டம்.- 2007.08.24 ஆந் திகதிய 06ஃ 2006 (IV) ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III, ஏற்புடையதான மாதச் சம்பள அளவுத்திட்டம் ரூபா 13, 990 - 10 * 145 - 11 * 170 -6 * 240 - 14 * 320 - 23,230 ஆகும். இப்பதவி நிரந்தரமானதும் ஓய்வூதியம் உரித்துடையதுமாகும்.
தகைமைகள்.- அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு
III இன் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பின்வரும் தகைமைகள் ஏற்புடையதாகும் :-
(அ) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ஆ) விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று 18 வயதிற்குக் குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
(இ) நல்லொழுக்கமுடையவராக இருத்தல் வேண்டும்.
(ஈ) நன்நடத்தையினை கொண்டவராகவும் தீவின் எப்பகுதியிலும் சேவையாற்றுவதற்கான தேகாரோக்கியத்தைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
(உ) கீழ்க்குறிப்பிடப்படும் கல்வித் தகைமைகளை விண்ணப்பப் படிவம்
கையளிக்கப்பட வேண்டிய இறுதித் திகதிக்கு முன் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
(1) கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி மற்றும் கணிதம் அடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் (6) சித்தியடைந்திருத்தல்.
(2) கல்விப் பொதுத்தராதரப் (உயர் தரப்) பரீட்சையில் சாதாரண பொதுப்பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த எல்லாப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்.
குறிப்பு.- 4 பாடங்கள் உள்ளடக்கிய பழைய பாடத்திட்டத்தின்கீழ் 3 பாடங்கள் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.
கவனிக்கவும்.- ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பதவிக்குரிய எல்லாத் தகைமைகளையும் 2014, செத்தெம்பர் மாதம் 29 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பூர்த்தி செய்திருத்தல் கட்டாயமாகும்.
பரீட்சைத் திட்டம்.-
(அ) பரீட்சை இரண்டு வினாத்தாள்களைக் கொண்டிருக்கும். இப் பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடாத்தப்படுவதுடன் விண்ணப்பிக்கும் மொழியை பின்னர் மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
(1) மொழித்திறன் - 100 புள்ளிகள் -2 1/2 மணித்தியாலம்
(2) உளச்சார்பு - 100 புள்ளிகள் - 1 மணித்தியாலம்
மொழித்திறன்.- வெளிப்படுத்தல், கிரகித்தல், எழுத்துக் கோர்வை,மொழி மற்றும் கட்டுரை, தரப்படும் கடிதம் ஒன்றை வரைதல்,கொடுக்கப்படும் தரவுகளைக் கொண்டு வரைபுகள் மற்றும் அட்டவணைகளைத் தயாரித்தல் , கொடுக்கப்படும் பந்திகளைச் சுருக்கி எழுதுதல், சில வாக்கியங்களின் உள்ளடக்கத்தினை ஒரு வாக்கியமாக எழுதுதல், எளிய இலக்கண விதிகளைப் பிரயோகித்தல் ஆகியவற்றில் பரீட்சார்த்தியின் திறனைச் சோதிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட வினாக்களுடன் தொடர்புபட்ட பாடத்தினை இவ்வினாத்தாள் கொண்டிருக்கும். எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
உளச்சார்பு.- இவ்வினாத்தாள் பரீட்சார்த்தியின் எண்களில் உள்ள ஆற்றல், தர்க்கரீதியான சக்தி, பொது விவேகம் என்பனவற்றை அளவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட வினாக்களுடன் தொடர்புபட்ட பாடத்தினைக் கொண்டி ருக்கும். இந்த வினாப்பத்திரமானது பல்தேர்வு வினாக்களையும் குறுகிய விடைகளுக்கான வினாக்களையும் உள்ளடக்கிய 50 வினாக்களைக் கொண்டதுஎல்லா வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2014.09.29 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக பதிவுத் தபாலில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் :
பரீட்சை ஆணையாளர் நாயகம்,
ஒழுங்கமைப்பு வெளிநாட்டுப் பரீட்சைக் கிளை,
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,
தபாற்பெட்டி இல.1503,
கொழும்பு.
மேலதிக விபரங்கள்
த.ஜீவராஜ்
No comments:
Post a Comment