இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா என்னும் திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது. கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.
Monday, September 22, 2014
தென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) - புகைப்படங்கள் - 1
இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா என்னும் திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் (06.09.2014) அரங்கேற்றப்பட்டது. கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.
Thursday, September 18, 2014
கப்பல்துறைக் காட்டினுள் கண்ணகி அம்மன் வழிபாடு - புகைப்படங்கள்
திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான கிராமங்களில் கப்பல்துறைக் கிராமமும் ஒன்றாகும். இது திருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் புராதான கண்ணகி அம்மன் வழிபாட்டு இடம் ஒன்று இருப்பதாக கப்பல்துறை இளைஞர் ஒருவர்மூலம் அறியக்கிடைத்தது.
Tuesday, September 09, 2014
“நீங்களும் எழுதலாம்” பௌர்ணமி தின நிகழ்வுகள் - புகைப்படங்கள்
“நீங்களும் எழுதலாம்” கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பௌர்ணமி தின நிகழ்வுகள் அச்சஞ்சிகையின் ஆசிரியர் திரு.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 08.09.2014 மாலை 4.30 மணியளவில் திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வினை எழுத்தாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Monday, September 08, 2014
அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு III - திறந்த போட்டிப் பரீட்சை
Friday, September 05, 2014
நரகாசுரன்
தீபாவளிப் பண்டிகை என்றதும் நம்மிடையே ஞாபகம் வருபவர்களில் நரகாசுரனும் ஒருவர். பாடசாலைக் காலங்களில் அசுர குணங்கொண்ட, பயங்கரமானவராக அறிமுகமான புராணக் கதாபாத்திரம் இவர். பின்னாட்களில் அசுரர் பற்றிய தேடல்கள் பயந்தருவதற்குப் பதிலாக புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் ஆரம்பப் புள்ளிகளாயின. அதன்படி சுரர் என்பவர்கள் பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் என்றும். அசுரர் என்போர் சுரராகிய தேவர்களுக்கு விரோதிகள் என்றும் அறியக்கிடைத்தது.
Monday, September 01, 2014
திருகோணமலையில் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் உலக சாதனை முயற்சி
Subscribe to:
Posts (Atom)