Tuesday, August 26, 2014

17 வருடங்களின் பின் பழைய மாணவர் ஒன்று கூடல் 2014 - புகைப்படங்கள்


திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்விகற்ற 1997 A/L, 1994 O/L மாணவர்களின் சந்திப்பு சுமார் 17 வருடங்களின் பின்னர் 24.08.2014 பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றது. அன்று திருகோணமலை நகரில் வசிக்கும் நண்பர்கள் மீள்ளிணையக் கிடைத்தது ஒரு சந்தோசமான சந்தர்ப்பமாகும்.
இவ்வாறான சந்திப்பு பற்றிய ஆரம்ப முயற்சி 2013 கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடலின் போது முதன்முதலில் உருவானது. அன்றையதினம் அங்கு வருகைதந்திருந்த பழைய மாணவர்களில் எமது வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது அதற்குக் காரணமாகும். அன்று எமது அதிபர் திரு.சி.தண்டாயுதபாணியுடன் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டபோது எமது  1997 A/L, 1994 O/L அணியினை மீள்ளிணைக்கும் எண்ணக்கரு உருவானது.


ஒருவருட காலத்தின் பின்னர் 16.08.2014 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள 'குணா கல்வி நிலையத்தில்'  ஒன்றுகூடிய நண்பர்கள்  இவ்வொன்றுகூடலின் ஆரம்பப்புள்ளியாக எமது பாடசாலையில் இடம்பெற இருக்கும் சர்வதேச ஆசிரியர் தினம் 2014 இனை சிறப்புற நாடாத்துவதில் துணைபுரிய ஏகமனதாகத் தெரிவுசெய்தார்கள். இதற்கான முக்கிய காரணம் நாங்கள் பாடசாலையில் இருந்து விலகியபோது சில அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது ஆசிரியர், மாணவர்களுகிடையான பிரிவுபசாரம் இடம்பெறாமையைக் குறிப்பிடலாம்.

எமது கல்லூரியின் ஆசிரிய சமூகத்தையும், கல்விசாரா ஊழியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகளில் முதன் முறையாக பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து செயற்பட Trinco Hindu Old Boys 97 (A/L), 94 (O/L) அணிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது தொடர்பில் பாடசாலை அதிபருடனும், பழைய மாணவர் சங்கத்துடனும் கலந்துரையாடப்பட்டு அவர்களது சம்மதம் பெறப்பட்டது.




இச்செயற்பாட்டினை இனிதுற நிறைவேற்ற எமது அணி மாணவர்களிடையே நிதி திரட்டும் பணி ஆரம்பிக்கபட்டது. இது தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பங்களிப்பினைச் செலுத்தவும்.
திரு. செல்வேந்திரன்
திரு. சுரேன்குமார்
திரு. அன்பழகன்
ஆகியோரை SEP 14 க்கு முன்னர் நண்பர்கள் அணுகவும்.
இது ஆரம்ப முயற்சி என்றாலும் எமது இறுதி இலக்கு திருகோணமலையில் எம்முடன் கல்விகற்ற  1997 A/L, 1994 O/L அனைத்துப் பாடசாலை மாணவர்களையும் ஒன்றிணைப்பதாகும்.


த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment